மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ திரைப்படத்தில் வைகைப்புயல் வடிவேலு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
நகைச்சுவை நடிகராகயில்லாமல் ஒரு சீரியஸான கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ரஹ்மான் இசையில் ஒரு பாடலையும் பாடி அசத்தியுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் பேசிய நடிகர் வடிவேலு, “சலாம் அலைக்கும், அலைக்கும் சலாம் ” என ரஹ்மானுக்கு வணக்கம் வைத்தபடி தனது பேச்சை ஆரம்பித்தார். பின்னர் பேசிய அவர், “இந்த பாடலை முதலில் உதயநிதி சார் தான் ஆசைப்பட்டார். சென்று பார்த்தால், ஹேர் பின் பெண்டு போன்று பல வளைவுகள் இருந்தது. பாடல் பாடுவதற்கு ஸ்டூடியோவிற்குள் அனுப்பினார்,உள்ளே அதிகமாக வியர்த்தது, கீழே வாலி தான் இல்லை. இருந்திருந்தால் அது நிறைஞ்சிருக்கும். ரஹ்மான் பாடலை பாடினார். அதை கேட்டு அசந்துவிட்டேன். தரையில் நினைத்ததையெல்லாம் திரையில் நடிப்பதற்கு கமல் சாரிடம் தான் கற்றுக்கொண்டேன். மொத்த படத்தையும் நான் பாடுன ஒத்த பாட்டுல சொல்லிட்டாரு மாரி செல்வராஜ். நான் இன்னும் படத்தை பார்க்க வில்லை, கமல் சார் பார்த்துவிட்டு நன்றாக வந்திருக்கிறது எனக் கூறினார். இத்திரைப்படத்தின் உண்மையான மாமன்னன் மாரி செல்வராஜ் தான். கமல் சார் தயாரிப்பில் அந்த ஒரு படத்தை மட்டும் உதயநிதி நடிக்கவேண்டும் என்பது எனது வேண்டுகோள். அந்த கதை அற்புதமானது” என்று பேசியுள்ளார்.