`பரியேறும் பெருமாள்’, `கர்ணன்’ படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்.
உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கிறார். இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற வருகிறது.
இவ்விழாவில் பேசிய மாரி செல்வராஜ், `இத்திரைப்படத்தின் கதை படமாகுமா என்று சந்தேகம் முதலில் இருந்தது. இப்போது அது கடைசி கட்டத்தை நெருங்கியுள்ளது. முதலில், ரெட் ஜெயன்ட்டில் படம் இயக்கப் போகிறீர்கள். உங்களுக்கு அங்கு உள்ள செண்பக மூர்த்திக்கு ஒத்துப்போக வாய்ப்பே கிடையாது என கூறினார்கள். இப்போது வரை ஒரு நாள் ஷூட்டிங் கேட்கும் அளவிற்கு என்னை பார்த்துக்கொண்டார்கள். உயிரே திரைப்படத்தை திரையரங்கத்தில் ரஹ்மான் சார் பாடல்களை கேட்ட பின்பு, `தய்ய தய்யா’ பாடலை பாடிக்கொண்டு ஆடு, மாடுகளை மேய்தேன். மாமன்னன் கதாபாத்திரத்தை எனது தந்தையை வைத்து தான் வடிவமைத்தேன். மாமன்னன் படம் உருவாகுவதற்கு `தேவர் மகன்’ ஒரு காரணம். அந்த படத்தில் வரும் சின்ன தேவர், பெரிய தேவர் கதாபாத்திரங்களில் என் தந்தை இருந்தால் எப்படி இருக்கும் என யோசிச்சுதான் இந்த கதையை வடிவமைத்தேன்.” என்று பேசினார்.