Mahindra SUV, CV Sales Report May 2023 – மஹிந்திரா எஸ்யூவி, வர்த்தக வாகன விற்பனை நிலவரம்

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம், மே 2023 விற்பனை நிலவரம் ஏற்றுமதியுடன் சேர்த்து, பயணிகள் வாகனங்கள், வணிக வாகனங்கள் மற்றும் 3 சக்கர வாகனங்கள் உட்பட 61,415 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. மே 2022-ல் விற்பனை செய்யப்பட்ட 53,726 எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், ஆண்டுக்கு ஆண்டு 14 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

குறிப்பாக இந்நிறுவனம், 2,92,000 க்கு மேற்பட்ட ஆர்டர்களை பெற்று டெலிவரி எண்ணிக்கையை உயர்த்த முடியாமல் தினறி வருகின்றது. ஸ்கார்ப்பியோ, எக்ஸ்யூவி 700 மற்றும் தார் ஆகிய மூன்று கார்களுக்கு அதிக முன்பதிவு உள்ளது.

Mahindra SUV sales Report – May 2023

மே 2023-ல் மஹிந்திரா நிறுவனத்தின் மொத்த பயணிகள் வாகன விற்பனை 33,931 ஆக உள்ளது. இதில் 32,886 வானங்கள் உள்நாட்டு விற்பனை மற்றும் 1048 ஏற்றுமதி அடங்கும். கடந்த ஆண்டு இதே மாதத்தில் 26,904 எண்ணிக்கை விற்பனை செய்யப்பட்டதை விட உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை 23 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

Mahindra CV sales Report – May 2023

வர்த்தக வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் விற்பனையில் 4.5 % வளர்ச்சியை பெற்றுள்ளது. கடந்த வருடம் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் நிறுவனம் 4.5 சதவீதம் அதிகரிப்புடன் 25,913 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. மே 2022 இல் ஏற்றுமதி செய்யப்பட்ட 2028 எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், மஹிந்திரா ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 29 சதவீத வளர்ச்சியை 2616 எண்ணிக்கையை பெற்றுள்ளது.

2023 mahindra bolero maxx pikup

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.