வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: வரும் ஜூன் 22-ம் தேதி அமெரிக்க பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி , அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
வரும் ஜூன் 22-ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்க பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இந்த பயணத்தின் போது அதிபர் ஜோபைடனை சந்தித்து இரு நாடுகளுக்கிடையேயான பரஸ்பரம் நட்புறவு குறித்து பேசுகிறார்.
இந்நிலையில் அமெரிக்க பார்லி., செயலகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, அரசு முறைப்பயணமாக 22-ம் தேதி அமெரிக்கா வரும் பிரமதர் மோடி, அமெரிக்க பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றுகிறார். பின்னர் அதிபர் ஜோபைடன் , மனைவி ஜில் பைடன் ஆகியோர் பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் விருந்தளிக்கின்றனர். பின்னர் அமெரிக்க வாழ் இந்தியர்களை பிரதமர் மோடி சந்திக்கிறார். இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement