இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Rajinikanth: ரஜினிகாந்த் வீட்டில் இருந்து எதிர்பார்த்த நபரை விட்டுவிட்டு யாருமே எதிர்பாராத நபர் நடிக்க வந்திருக்கிறார்.
ரஜினிசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்களில் நடித்து வருகிறார். அவரின் மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா இயக்குர்களாக இருக்கிறார்கள். ஐஸ்வர்யாவின் கணவர் தனுஷ் உலகம் போற்றும் நடிகர். சௌந்தர்யாவின் கணவர் விசாகனும் ஒரு நடிகர். இந்நிலையில் தான் ரஜினி வீட்டில் இருந்து மேலும் ஒரு நடிகர் உருவாகியிருக்கிறார்.சுனைனா”இந்த மாதிரி கேள்வி கேட்காதீங்க” கடுப்பான நடிகை சுனைனா!யாத்ராதனுஷை பிரிந்த பிறகு அப்பா ரஜினி வீட்டில் தன் மகன்கள் யாத்ரா, லிங்காவுடன் வசித்து வருகிறார் ஐஸ்வர்யா. அதில் யாத்ரா ஹீரோவாக வேண்டும் என ரஜினி, தனுஷ் ரசிகர்கள் விரும்புகிறார்கள். யாத்ராவை பார்த்தால் ரஜினியை இளம் வயதில் பார்த்தது போன்றே இருக்கிறார். யாத்ரா குறித்த அறிவிப்பை எதிர்பார்த்தால் ரஜினியின் அண்ணனான சத்யநாராயண ராவ் கெய்வாட் தான் நடிகராகியிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
சத்யநாராயண ராவ்80 வயதாகும் சத்யநாராயண ராவ் நடிகராகிவிட்டார். இலங்கையை சேர்ந்த Brilliant Creations நிறுவனம் தயாரிக்கும் படம் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத அந்த படத்திற்கு பூஜை போட்டுவிட்டார்கள். ரஜினியின் பெற்றோரின் நினைவிடம் இருக்கும் நாச்சிக்குப்பத்தில் தான் படத்தின் பூஜை நடந்தது.
அண்ணன்சத்ய நாராயண ராவ் நடிகராவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில் ரஜினி தன் அப்பா போன்று கருதும் சத்ய நாராயண ராவ் கெய்க்வாட் தம்பி வழியில் நடிக்க வந்துவிட்டார்.
ரஜினி வீட்டில் இருந்து யாத்ராவை எதிர்பார்த்த ரசிகர்கள் சத்ய நாராயண ராவ் நடிகராகியிருப்பதால் வியப்பு கலந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஜெயிலர்ரஜினியோ நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படப்பிடிப்பு நிறைவடைந்ததை கேக் வெட்டி கொண்டாடினார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானது. ரஜினியின் கெட்டப்பை பார்த்து தலைவர் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். அனைவரின் கவனமும் கேக் மீது தான் சென்றது. அந்த அளவுக்கு பெரிய கேக் வெட்டியிருக்கிறார்கள்.
லால் சலாம்Kamal Haasan: இளையராஜா இப்படி செய்வார்னு எனக்கு அப்பவே தெரியும்: சீக்ரெட் சொன்ன கமல்ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாயாக நடித்து வருகிறார் ரஜினி. கவுரவத் தோற்றம் என்றாலும் இரண்டு சண்டை காட்சிகளில் வருகிறார். ஒரு சண்டை காட்சியை மும்பையில் படமாக்கினார் ஐஸ்வர்யா. மொய்தீன் பாயை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். அந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
படங்கள்லால் சலாமை அடுத்த ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடிக்கிறார் ரஜினி. லைகா நிறுவனம் தயாரிக்கும் அந்த படம் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்படுகிறது. அந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிக்கிறாராம். முன்னதாக சீயான் விக்ரமிடம் தான் கேட்டார்கள். ஆனால் அவர் வில்லனாக நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். தலைவர் 170 படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் ரஜினி. அந்த படத்தை கமல் ஹாசன் தயாரிக்கவிருக்கிறார்.
Kamal Haasan: நண்பர் ரஜினியிடம் பேசிவிட்டேன்: குட் நியூஸ் சொன்ன கமல் ஹாசன்