இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான தென் கொரியாவின்
Samsung நிறுவனம்
அதன் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக இருக்கக்கூடிய M14 5G போனின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நாம் கொடுக்கும் விலைக்கு ஏற்ற சிறந்த திறன் மற்றும் வேல்யூ உள்ள போன்.
அதிரடி விலை குறைப்புஇந்த போன் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் இருக்கும் விலையை விட இன்னும் குறைவான விலைக்கு சாம்சங் அதிகாரபூர்வ இணையதளத்தில் பெறலாம்.
இதன் 4GB RAM + 128GB ஸ்டோரேஜ் மாடல் 13,990 ஆயிரம் ரூபாய் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் சாம்சங் இணையதளத்தில் ICICI வங்கியின் கிரெடிட் கார்டு மூலமாக 1,500 ரூபாய் தள்ளுபடி பெறலாம். இதனால் இந்த போனை 12,490 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கமுடியும்.ஏன் இதை வாங்கவேண்டும்?இந்த ஸ்மார்ட்போன் விலை குறைவாக உள்ளது என்பதை தாண்டி நாம் இந்த ஸ்மார்ட்போனை ஏன் வாங்கவேண்டும் என்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அது பற்றிய விரிவான விளக்கத்தை இந்த பதிவில் காணலாம்.கவர்ச்சிகரமான டிஸ்பிளேஇதில் 6.6 இன்ச் LCD பேனல் முழு HD+ ஸ்க்ரீன் உள்ளது. இதன் டிஸ்பிளே தரமும் மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளது. சாம்சங் போன்களின் டிஸ்பிளே என்றால் எப்போதும் சிறப்பானதாக இருக்கும்.சிறந்த கேமராஇந்தியாவில் 20 ஆயிரம் ரூபாய் விலைக்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் சிறந்த தரமான கேமரா உள்ள போனாக M14 5G உள்ளது. இதில் Low Light, Dynamic Range, Sharpness என அனைத்தும் சிறப்பாக உள்ளது. இதை எல்லாம் நாம் வெறும் 15 ஆயிரம் ரூபாய் விலைக்கு கீழ் பெறலாம்.நீண்டநேர பேட்டரிபட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு மிகவும் தேவையான மிகப்பெரிய 6000mAh பேட்டரி உள்ளது. 5G இணையம் பயன்படுத்தினால் கூட நமக்கு குறைந்தது 2 நாட்கள் பேட்டரி நீடிக்கும்.அட்டகாசமான சிப்இதில் Exynos 1330 சிப் இடம்பெற்றுள்ளது. Candy Crush, Asphalt 9 போன்ற மிகப்பெரிய வீடியோ கேம் விளையாட்டுகளை எந்த ஒரு பிரச்சனையும் இன்றி நம்மால் விளையாடமுடியும். இதில் சைடு மவுண்ட் பிங்கர் பிரிண்ட் சென்சார் வசதியும் கூடுதலாக உள்ளது.ஒரு பின்னடைவுஇப்போதெல்லாம் சாம்சங் நிறுவன ஸ்மார்ட்போன்களுடன் சார்ஜ்ர் தருவதில்லை. மாறாக நாம் தனியாக பணம் செலுத்தி சார்ஜ்ர் வாங்கவேண்டும். இந்த போனிற்கு 25W வரை பாஸ்ட் சார்ஜ்ர் வசதி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்