சென்னை: தளபதி விஜய்யை வைத்து படம் இயக்க இயக்குநர்கள் தவமாய் தவம் கிடந்து வரும் நிலையில், அல்வா போல வந்த வாய்ப்பை இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் வேண்டாம் என மறுத்து விட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயம் ரவியை வைத்து கோமாளி படத்தை இயக்கி ஹிட் கொடுத்தவர் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன். அதன் பிறகு லவ் டுடே படத்தில் அவரே ஹீரோவாக நடித்து படத்தையும் இயக்கி இருந்தார்.
அடுத்ததாக இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் ஹீரோவாக பிரதீப் ரங்கநாதன் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இயக்குநர் டு ஹீரோ: ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் தனது முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்து அசத்தினார்.
அதன் பின்னர், திடீரென ஹீரோவாக நடிக்கப் போவதாக அவர் அறிவித்ததும், எதுக்கு தேவையற்ற வேலை என பலரும் ட்ரோல் செய்தனர். ஆனால், ஏஜிஎஸ் தயாரிப்பில் அவர் இயக்கி நடித்த லவ் டுடே படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், கோலிவுட்டின் எமர்ஜிங் ஹீரோவாகவே பிரதீப் ரங்கநாதன் மாறிவிட்டார்.
விஜய் பட வாய்ப்பு: ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் சில படங்கள் இயக்குவதாக பிரதீப் ரங்கநாதன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், விஜய் கால்ஷீட் கிடைத்துள்ளது. இந்த படத்தை இயக்குறீங்களா என அர்ச்சனா கல்பாத்தி முதலில் பிரதீப் ரங்கநாதனுக்குத் தான் அந்த ஆஃபரை கொடுத்ததாகவும் ஆனால், பிரதீப் ரங்கநாதன் இப்போதைக்கு ஐ எம் வெரி பிஸி என மறுத்து விட்டதாகவும் ஷாக் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரதீப் ரங்கநாதன் மறுத்த நிலையில், தான் தளபதி 68 படத்தை இயக்கும் வாய்ப்பு வெங்கட் பிரபுவுக்கு கிடைத்துள்ளதாக கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் ஹெவியாக கிளம்பி உள்ளன.
எதனால் மறுத்தார்: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஹீரோவாக பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ள நிலையில், நடித்தால் இனிமேல் ஹீரோ தான் என்றும் அப்படியே இயக்கினாலும் தனது படங்களை தானே இயக்கி நடிக்கும் முடிவில் பிரதீப் ரங்கநாதன் உள்ளதால் தான் விஜய் படத்தை இயக்க முடியாது என்றே கூறி விட்டதாக கூறுகின்றனர்.
விஜய்யின் லவ் டுடே டைட்டிலில் படத்தை இயக்கி நடித்து ஹீரோவான பிரதீப்புக்கு அல்வா போல இப்படியொரு சான்ஸ் கிடைத்தும் மனுஷன் வேணாம்னு சொல்லிட்டாரே என கோடம்பாக்கமே வாயடைத்து போயுள்ளதாக கூறுகின்றனர்.