கன்னட திரையுலகில் பிரபல நடிகராக திகழ்பவர் நிதின் கோபி. இவர் பல படங்களில் நடித்துள்ளார். 39 வயதான நடிகர் நிதின் கோபி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
நிதின் திரையுலகில் பிரபலமான புல்லாங்குழல் வாசிப்பாளரான கோபியின் மகன். இவர் விஷ்ணுவர்தன் நடித்த ‘ஹலோ டாடி’ என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார். மேலும் கேரளித கேசரி, முத்தினந்த ஹெண்டதி, நிஷ்யப்தா, சிரபாந்தவ்யா உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அத்துடன் பல சின்னத்திரை தொடர்களில் நடித்ததுடன் இயக்கவும் செய்துள்ளார். இவர் பெங்களூரில் உள்ள இட்டமடு பகுதியில் தன் பெற்றோருடன் வசிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் நிதின் கோபி வீட்டில் உள்ளபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனையில் கொண்டு சென்ற போது, வரும் வழியிலயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
Leo: ‘வாரிசு’ படத்துக்கு நேர்ந்த சோகம் லியோவுக்கு வந்துவிடக்கூடாது: விஜய் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்.!
39 வயதான நிதினின் திடீர் மரணம் திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவிற்கு திரையுலகை சார்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1 Year Of Vikram: கோலிவுட் சினிமாவை அலற விட்ட ஆண்டவர் – லோகேஷ்: மறக்க முடியுமா..!