சென்னை : பிரபல கர்நாடக பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் இசை தான் என் வாழ்க்கை என்று மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.
பி ரபல சகீத மேதை டி.கே .பட்டம்மாளி ன் பேத்தி தான் நித்யஸ்ரீ.
இவரது தந்தை மிருதக வித்வான் என்பதால், தந்தையுடன்சேர்ந்து பல கச்சேரிகளில் பாடி உள்ளார்.
மயக்கும் குரல் : பாடகி நித்ய ஸ்ரீ மகாதேவனின் குரலுக்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. மேடையில் அமர்ந்து ராகம் பிடிக்கும் போது மயகாத உள்ளகளும் மயங்கி விடும். கச்சேரி முடியும் வரை தனது குரலால் ரசிகர்களை கட்டிப்போட்டுவிடுவார். ஏஆர் ரஹ்மான் இசையில் பல திரைப்படங்களிலும் பாடி உள்ளார்.
பிகாம் படித்தேன் : இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள நித்ய ஸ்ரீ மகாதேவன் மனம் திறந்து பல விஷயங்களை பேசி உள்ளார். எனக்கு சிறு வயது முதலே இசையின் மீது தான் ஆர்வம் இருந்தது. இருப்பினும் பி.காம் படித்தேன். அப்போது இருக்கும் குழந்தைகள் என்ன படிக்க வேண்டும்,என்ன வேலை செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். ஆனால், குழந்தை பருவத்தில் எனக்கு அந்த தெளிவு இல்லை.
விரும்பியதை படித்தேன் : என் பெற்றோரும் என்னை படிப்பு விஷயத்தில் வற்புறுத்தவில்லை. விருப்பமானதை படி என்று தான் சொன்னார்கள். இரவு 10 மணிக்கு மேல் படித்தால், படித்தது போதும் என்று தான் என் அப்பா சொல்லுவார். அதை தாண்டி என்னோட விருப்பத்தில் தான் நான் படித்தேன்.
இசை தான் என் வாழ்க்கை : இசை எனக்கு பிடித்து இருக்கிறது என்பதை தெரிந்து கொண்ட என் பெற்றோர் அதற்காக என்னை ஊக்கப்படுத்தினார்கள். இன்று இசை என் வாழ்க்கையாகி விட்டது. இசையை என்னிடம் இருந்து பிரிக்க முடியாத விசயமாகி விட்டது. அதிலிருந்து என்னால் மீண்டு வரமுடியவில்லை. அந்த அளவிற்கு இசை மீது எனக்கு காதல் என்று கர்நாடக பாடகி நித்யஸ்ரீ பேட்டியில் கூறினார்.