சிவகங்கை நேற்று நடந்த ஒடிசா ரயில் விபத்து குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நடந்த ரயில் விபத்தில் சுமார் 530 பேர் உயிர் இழந்துள்ளனர்.. நூற்றுக்கணககானோர் படுகாயம் அடைந்துள்ளனர். மரணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. உயிர் இழந்தோருக்கும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம், ”ஒடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்து வருத்தமளிக்கிறது. இது பாதுகாப்பு குறைபாட்டால் நடந்திருக்கலாம் என அஞ்சுகிறோம். […]