ஒடிசாவில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 233 பேர் பலியாகியுள்ளனர். 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ரயில் விபத்துஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாக பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7.30 மணியளவில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிக் கொண்டன. ஹவுராவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஏற்கனவே அங்கு தடம் புரண்டிருந்த பெங்களூரு – ஹவுரா ரயில் மீதும் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.
48 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை… எங்கெல்லாம் அடிச்சு நொறுக்கப் போகுது?233 பேர் பலி
விபத்து குறித்து தகவலறிந்ததும், தேசிய மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்கள், தீயணைப்பு வீரர்கள், விமானப்படை வீரர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் சம்பவ இடத்தில் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 23 பெட்டிகளுடன் சென்ற கோரமண்டல் பயணிகள் ரயிலில் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. நாட்டையே உலுக்கியுள்ள இந்த கோர விபத்தில் இதுவரை 233 பேர் பலியாகியுள்ளனர்.
900 பேர் படுகாயம்900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விடிய விடிய மீட்புப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. மத்திய விரைவு படையினர் மற்றும் அப்பகுதியில் உள்ள பொது மக்கள் என 100க்கும் மேற்பட்டோர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் பாலாசூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கோபால்பூர் மருத்துவமனை, சோரோ மற்றும் காந்தாபடா பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குவியல் குவியலாக
விபத்து நடந்த பகுதியில் சடலங்கள் குவியல் குவியலாக கிடக்கும் காட்சிகள் வெளியாகி நெஞ்சை உலுக்கியுள்ளது. காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒடிசா மாநில அரசு இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கிறது. மேலும் இன்று கறுப்பு நாளாகவும் அறிவித்துள்ளது.
நிவாரணம்
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரத்த தானம் செய்வதற்காக ஏராளமான இளைஞர்கள் மருத்துவமனையில் குவிந்துள்ளனர். இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய ரயில்வே அமைச்சகம் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கோர விபத்து