டேட்டா பயன்படுத்த எது சிறந்தது? ஆபர்களை அள்ளி வழங்கும் Airtel, Vodafone Idea,Jio!

கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் மொபைல் டேட்டாவை பயன்படுத்துவதின் வேகம் அதிகரித்து வருகின்றது.  நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தனது நெட்வொர்க்கில் உள்ள பயனர்கள் ஒரு மாதத்தில் 100 பில்லியன் ஜிபி டேட்டாவை பயன்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  நிறைய வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்பவராகவோ, கேம்களை விளையாடுபவர்களாகவோ அல்லது மணிக்கணக்கில் இசையைக் கேட்பவராகவோ இருந்தால், 2ஜிபி மொபைல் டேட்டா கண்டிப்பாக உங்களுக்கு போதுமானதாக இருக்காது. இப்போது பயனர்களுக்கு அதிகபட்ச மொபைல் டேட்டாவை வழங்கும் ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியாவின் சிறந்த ப்ரீபெய்டு திட்டங்களை பற்றி பார்ப்போம்.  ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி வரை மொபைல் டேட்டாவை வழங்கும் மூன்று திட்டங்களைக் கொண்டுள்ளது.  இந்த அனைத்து திட்டங்களும் அன்லிமிடெட் குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் ஆகியவற்றிற்கான அணுகலை வழங்குகின்றன.  30 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் திட்டமானது ரூ.349 வலையில் வருகிறது, ரூ.899 மற்றும் ரூ.2,023 திட்டங்கள் முறையே 90 நாட்கள் மற்றும் 252 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.

மறுபுறம் ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 2.5 ஜிபி மற்றும் 3 ஜிபி டேட்டா வழங்கும் பல திட்டங்களை வழங்குகிறது.  இந்த திட்டங்கள் அன்லிமிடெட் குரல் அழைப்புகள், அன்லிமிடெட்  5ஜி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், 3 மாதங்கள் Apollo 24/7 வட்ட உறுப்பினர், இலவச ஹெலோடியூன்ஸ், விங்க் மியூசிக் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் செயலிக்கு 28 நாட்களுக்கு அணுகலையும் வழங்குகின்றது.  82 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.999 திட்டம் ஒரு நாளைக்கு 2.5ஜிபியுடன், 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்புடன் வருகிறது.  365 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.3,359 திட்டம் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி மொபைல் டேட்டாவுடன், ஒரு வருடத்திற்கான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் மெம்பர்ஷிப்பையும் வழங்குகிறது.  28 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.399 திட்டமானது ஒரு நாளைக்கு 3ஜிபி மொபைல் டேட்டாவை வழங்குகிறது.    28 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.499 திட்டமானது 3ஜிபி டேட்டாவுடன் 3 மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கான அணுகலை வழங்குகிறது.  அடுத்ததாக  56 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ.699 திட்டம், ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா மற்றும் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பை வழங்குகிறது.

வோடபோன் ஐடியா 5ஜி சேவைகளை வெளியிடவில்லை என்றாலும், அது மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு போட்டியாக ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது.   28 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ.399 திட்டம் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.  28 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் ரூ.359 திட்டம் ஒரு நாளைக்கு 3 ஜிபி மொபைல் டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் குரல் அழைப்புகளை வழங்குகிறது.  28 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ.475 திட்டம் ஒரு நாளைக்கு 4ஜிபி மொபைல் டேட்டாவை வழங்கும்.  ஒரு நாளைக்கு 4 ஜிபி டேட்டா கொண்ட திட்டங்களுக்கு வரும்போது, ​​வோடபோன் ஐடியாவின் ரூ.475 திட்டம் சிறந்த விருப்பமாக இருக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.