திருவாரூரில் தனியார் பேருந்துகள் மோதி 5 பேர் படுகாயம்.!!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவூர் பகுதியில் இருந்து திருவாரூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. இதேபோல் தனியார் மினி பேருந்து ஒன்றும் திருவாரூரை நோக்கி பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. இந்த இரண்டு பேருந்துகளும் நாகை-தஞ்சை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தன.
இதில், தனியார் பேருந்து புதுகாலனி பகுதியில் வந்து கொண்டிருந்த போது, அந்த பகுதியில் உள்ள பயணிகளை ஏற்றுவதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்றது. அந்த நேரத்தில் பின்னால் வந்த மினி பேருந்து எதிர்பாராதவிதமாக தனியாா் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 2 பேருந்துகளும் சேதம் அடைந்து 2 பேருந்துகளிலும் பயணம் செய்த பயணிகளில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் பேருந்துகள் மோதி 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.