நாட்டையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள ஒடிசா ரயில் விபத்து நடந்தது எப்படி என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கோரமண்டல் விரைவு ரயில்மேற்குவங்க மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மேற்குவங்கத்தின் ஹவுராவுக்கு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை 3. 20 மணிக்கு ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது.
கோரமண்டல் ரயில் விபத்து… நெஞ்சை பிழியும் புகைப்படங்கள்!ஹவுரா சூப்பர் ஃபாஸ்ட்
இதேபோல் பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. கோரமண்டல் விரைவு ரயில் 6.30 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் நின்று புறப்பட்டது. பஹனகா பஜார் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது தண்டவாளத்தில் கோரமண்டல் விரைவு ரயிலும் ஹவுரா சூப்பர் பாஸ்ட் ரயிலும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது.
3 ரயில்கள்இதில் கோரமண்டல் எக்பிரஸின் 8 பெட்டிகள் தடம்புரண்டன. ஹவுரா அதிவிரைவு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டதாக தெரிகிறது. மேலும் சரக்கு ரயிலும் இந்த விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. இரண்டு பயணிகள் ரயில் ஒரு சரக்கு ரயில் என மொத்தம் 3 ரயில்கள் இந்த கோர விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொடூரமான விபத்தில் 238 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குவியல் குவியலாக சடலங்கள்… பதை பதைக்க வைக்கும் காட்சிகள்… நாட்டிய உலுக்கிய கோர விபத்து!மீட்புப் பணிகள்மேலும் 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
அவர்கள் அனைவருமே ஒடிசா மாநிலத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீட்புக்குழுவினர் இரவு முதலே மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு 7 மணிக்கு விபத்து நடைபெற்ற நிலையில் தொடர்ந்து இன்றும் இரண்டாவது நாளாக மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
35 தமிழர்கள்லைமேன்களின் கவனக்குறைவால் விபத்து நேர்ந்ததா அல்லது சிக்னல் கோளாறு காரணமாக இந்த பெரிய விபத்து நடைபெற்றதா என்று விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகே விபத்துக்கான சரியான காரணம் தெரியவரும். விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் 600க்கும் மேற்பட்ட மீட்புப்படை வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 35 பேர் தமிழர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.