மதுரை: ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு இன்று மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் மவுன அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் மற்றும் ஐஸ்வர்யம் அறக்கட்டளை சார்பில் காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்திலுள்ள காந்தி சிலை முன்பு இன்று மாலையில் ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கான மவுன அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதற்கான இரங்கல் கூட்டம் ஐஸ்வர்யம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் பாலகுருசாமி, அறக்கட்டளை பொருளாளர் டாக்டர் அமுதநிலவன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதில் காந்தி நினைவு அருங்காட்சியக கல்வி அலுவலர் நடராஜன், ஆராய்ச்சி நிலைய அலுவலர் தேவதாஸ் மற்றும் பணியாளர்கள், சமூக சேவகர் அமுதன், பள்ளி, மாணவ, மாணவிகள் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.