ஒடிசா மாநிலம், பாலசோர் பகுதியில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது ஷாலிமர் – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் யஷ்வந்த்பூர் – ஹவுரா அதிவிரைவு ரயில் மோதி, அடுத்தடுத்து பெரும் விபத்து நிகழ்ந்தது.
இந்த கொடூரமான விபத்தில் சிக்கி இதுவரை 261 பலியாகியுள்ளனர். 900 பேர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், விபத்து நடந்த பகுதியை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்திற்கு தமிழ் திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரின் அந்த இரங்கல் செய்தியில்,
தொலைந்து போயிருக்கலாம்
ஆறுதலாவது உண்டு,
தென்னங்கீற்று பந்தல் சிந்தும் ஒளியென நம்பிக்கையிருக்கும்
திரும்ப வரலாம்மென்ற நினைப்பு,
நினைப்பே உயிர் ஜோதி வளர்க்கும்.
வாழ
போனவர்கள்
திரும்ப வருகையில் நிகழும்
பயணங்கள் மீதான
காலத்தின் விபரீதப் போர்
கோர விபத்துகள்,
விபத்துக்கு பின்னிருக்கும்
ஒரு கவனமின்மை
அக்கவனமின்மைக்கு பின்னே நான் போகவில்லை,
இறப்பின்
அஞ்சலி செலுத்தும் நேரமிது.
பிழைத்தவர்கள்
மறுபடி
பிழைக்கச்
செய்யும்
தருணமிது
தப்பியவர்கள்
இல்லம் வரும்
மாலையிது.
சுற்றி வந்து
கைகொடுத்த கிராமத்து மனிதத்தை
வாழ்த்தும் நிமிடமிது.
– சீனு ராமசாமி.