வீட்டில் இருந்த சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்த வாலிபர் கைது.!!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியைச் சேர்ந்த தம்பதியினருக்கு பத்து வயதில் மகளும், எட்டு வயதில் ஒரு மகனும் உள்ளனர். இதில் தம்பதியினர் இருவரும் தினமும் கூலி வேலைக்கு சென்றுவிடுவதால் குழந்தையை அவர்களது பாட்டி கவனித்து வந்தார்.
ஆனால், இவர்களது பாட்டியும் வெளியூருக்குச் சென்று இருந்ததால் வீட்டில் குழந்தைகள் மட்டும் தனியாக இருந்தனர். இதை நோட்டமிட்ட அவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்த சிவ ஜெயராம் என்ற வாலிபர் சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார்.
இதனால், பயந்துபோன சிறுமி அழுதுகொண்டே வீட்டுக்கு ஓடி வந்துவிட்டார். இதையடுத்து சிறுமியை பின் தொடர்ந்து வந்த சிவஜெயராம் சிறுமியிடம் நடந்ததை வெளியில் சொல்லக் கூடாது என்று மிரட்டியுள்ளார்.
இருப்பினும், சிறுமி தன் தாய் வீட்டுக்கு வந்ததும் நடந்த சம்பவத்தை சொல்லி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி போலீசார் சிவ ஜெயராம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.