சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் அயலான்.
இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் இந்தப் படம் நீண்ட நாட்களாக சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. கிராபிக்ஸ் வேலைகளுக்காக படக்குழுவினர் அதிகமாக செலவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் படம் வரும் தீபாவளியையொட்டி ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டீசர் எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
அயலான் டீசர் குறித்து அப்டேட் வெளியிட்ட ரவிக்குமார் : இன்று நேற்று நாளை என்ற டைம் டிராவலிங் படத்தை சிறப்பான திரைக்கதையுடன் கொடுத்தவர் இயக்குநர் ரவிக்குமார். இந்நிலையில், ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்துள்ள படம் அயலான். இந்தப் படத்தின் சூட்டிங் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. சூட்டிங் நிறைவடைந்து கிராபிக்ஸ் வேலைகளும் தற்போது முழு வீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், படம் தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படத்தின் டீசர் எந்த நேரத்திலும் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இதை படத்தின் இயக்குநர் ரவிக்குமார் மறுத்துள்ளார். சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் ரிலீசை தொடர்ந்தே அயலான் படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் VFX பணிகளுக்காக 400 பேர் தற்போது உழைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வேலைகள் அக்டோபரில்தான் நிறைவடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து படம் தீபாவளியையொட்டி வெளியாகவுள்ளதாகவும் அப்டேட் தெரிவித்துள்ளார். படத்தை மோஷன் கேப்சர் டெக்னாலஜியை பயன்படுத்தி எடுத்துள்ளதாகவும் ரவிக்குமார் அப்டேட் தெரிவித்துள்ளார். இந்தப் படத்திற்காக 40 லட்சம் செலவில் சூட் ஒன்றை வாங்கியதாகவும் கொரானாவிற்கு முன்னதாக அந்த சூட்டை வாங்கியதாகவும் தெரிவத்துள்ள அவர், அதுபோல மூன்று முறை அதை வாங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அயலான் படத்தின் ஏலியன் பொம்மைக்காக 2 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் கேஜிஆர் ராஜேஷ் தனது பேட்டியில் தெரிவித்திருந்தார். அதனுடைய அசைவை மட்டும் கிராபிக்ஸ் செய்துள்ளதாகவும் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு அந்த பொம்மையையும் அழைத்து வர திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். இந்தப் படம் ஈ.டி படத்தில் தழுவல் இல்லை என்றும் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் படம் உருவாகியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரிலீசான பிரம்மாஸ்திரா படம் 4000 VFX காட்சிகளுடன் வெளியான நிலையில், தற்போது அயலான் படம் 4500 VFX காட்சிகள் நிறைந்த படமாக வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலையில் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் வெளியாகவுள்ள நிலையில், அடுத்ததாக குறுகிய இடைவெளியிலேயே அயலான் படமும் தீபாவளிக்கு ரிலீசாகவுள்ளது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது.