சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமி தொடர் அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது.
இந்தத் தொடர் விரைவில் நிறைவடைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆனாலும் அவ்வளவு சீக்கிரத்தில் தொடரை நிறைவு செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கையை அவர்க்ள வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்தத் தொடரில் கோபி, பாக்கியா மற்றும் ராதிகா இவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு அடுத்தடுத்த எபிசோட்கள் தொடர்ந்து வெளியாகி வந்தாலும், ரசிகர்கள் இந்தத் தொடருக்கு அதிகமான வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.
எழில் -அமிர்தாவிடம் குழந்தை குறித்து கேள்வி எழுப்பும் ஈஸ்வரி : விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர், பேமிலி சென்டிமெண்டை மையமாக கொண்டு தற்போது பரபரப்பான எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது. இருந்த போதிலும் ரசிகர்கள் இந்தத் தொடரின் அடுத்தடுத்த எபிசோட்கள்,ப்ரமோக்கள் என அனைத்தையும் பார்க்க அதிகமான ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தத் தொடர், சேனலின் டிஆர்பியில் அதிக புள்ளிகள் பெற்று முதலிடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.
கோபி, பாக்கியா மற்றும் ராதிகா உள்ளிட்ட கேரக்டர்களை மையமாக கொண்டு இந்தத் தொடரின் அடுத்தடுத்த எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அவர்களுக்கு இணையாக தொடரின் சைட் கேரக்டர்களும் மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றன. கோபி மற்றும் பாக்கியாவின் இரண்டு மகன்கள் செழியன் மற்றும் எழில் மற்றும் அவர்களது மனைவிகள், மகள் இனியா என சைட் கேரக்டர்களும் அதிக வரவேற்பை பெற்று வருகின்றன.
குறிப்பாக கோபியின் அப்பா மற்றும் அம்மா கேரக்டர்களும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. ராதிகா, கோபியுடன் பாக்கியா வீட்டிலேயே செட்டில் ஆகிவிட, அவரை விரட்டும்வகையில், ஈஸ்வரி ராதிகாவிடம் போடும் சண்டைகள் விறுவிறுப்பை ஏற்படுத்தி வருகின்றன. தொடர்ந்து இதனால் கடுப்பாகும் ராதிகா, தனக்கு யாரும் சப்போர்ட் செய்வதில்லை என்று கூறி, கோபியிடம் தொடர்ந்து சண்டை இழுக்கிறார். இதனால் அவர்களது குடும்ப வாழ்க்கை மிகவும் மோசமாக அமைகிறது.
இதனிடையே தன்னுடைய கணவனை தான் விவாகரத்து செய்தாலும், தொடர்ந்து அவரது அப்பா, அம்மா மற்றும் தன்னுடைய குழந்தைகளை சிறப்பாக மெயின்டெயின் செய்கிறார் பாக்கியா. புதிதாக கேன்டீன் கான்டிராக்ட் எடுத்து அதிலும் மிளிர்கிறார். தொடர்ந்து ஆங்கில வகுப்பிற்கு போகிறார், சுடிதார் அணிகிறார். அவரது வாழ்க்கை ஏறுமுகமாக போக, மிகவும் சிறப்பாக ஒரு அலுவலகத்தில் ஹெச்ஆர் ஆக இருக்கும் ராதிகாவோ, கோபியின் அம்மாவிடம் குடுமிப்பிடி சண்டை போடாத குறையாக சண்டையிட்டு தன்னுடைய தரத்தை தாழ்த்தி வருகிறார். பாக்கியாவிற்கு எதிராக சதி செய்தும் வாங்கிக் கட்டிக் கொள்கிறார்.
நீண்ட பிரச்சினைக்கு பிறகு எழில மற்றும் அமிர்தாவிற்கு திருமணம் செய்து வைத்துள்ளார் பாக்கியா. அமிர்தாவிற்கு ஏற்கனவே நிலா என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், அவர்கள் இருவருக்கும் திருமணமாகி 6 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அவர்கள் ஏன் இன்னும் குழந்தை குறித்து யோசிக்கவில்லை என்று அனைவர் முன்னிலையிலும் ஈஸ்வரி கேள்வி எழுப்புகிறார். இதனால் அவர்கள் இருவரும் தர்ம சங்கடத்திற்கு உள்ளாகின்றனர்.
இதுகுறித்து, தன்னுடைய மாமியாரிடம் கேள்வி எழுப்புகிறார் பாக்கியா. அனைவர் முன்னிலையில் அவர் குழந்தை பிரச்சினையை பேசியிருக்கக்கூடாது என்று சுட்டிக் காட்டுகிறார். ஆனால் அதை ஏற்க மறுக்கும் ஈஸ்வரி, அந்தக் குடும்பத்தில் பாக்கியா தான் அனைத்து முடிவுகளையும் எடுக்க வேண்டுமா என்று திட்டி தீர்க்கிறார். இதனால் ராதிகாவிற்கு மிகவும் சந்தோஷம் கிடைக்கிறது. ஆனாலும் ஈஸ்வரி, உடனடியாக வந்து பாக்கியாவை தூங்கப் போகுமாறு செல்லமாக கண்டிக்கிறார். இதனால் ராதிகாவின் முகம் மாறுகிறது.