பஜாஜ் ஆட்டோ மே மாதம் விற்பனை முடிவில் மொத்தமாக 3,55,148 வாகனங்களை விற்பனை செய்து 23 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதம் 2,75,868 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. தொடர்ந்து இருசக்கர வாகன ஏற்றுமதியில் பஜாஜ் ஆட்டோ முன்னிலை வகிக்கின்றது.
Bajaj Auto Sales Report – May 2023
பஜாஜ் ஆட்டோ அறிக்கையில் மொத்த இரு சக்கர வாகன விற்பனை 3,07,696 எண்ணிக்கை ஆகும். கடந்த ஆண்டு மே மாதத்தை விட 23 சதவீதம் அதிகரித்து 2,49,499 எண்ணிக்கை பெற்றது.
மே 2022-ல் 96,102 விற்பனை எண்ணிக்கையை ஒப்பிடும்போது உள்நாட்டில் இரு சக்கர வாகன விற்பனை 1,94,811 வாகனங்களாக உயர்ந்துள்ளது என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், 2022 மே மாதத்தில் 1,53,397 எண்ணிக்கையாக இருந்த ஏற்றுமதி கடந்த மாதம் 1,12,885 ஆக குறைந்துள்ளது.
3 சக்கர வர்த்தக வாகனங்கள் விற்பனை 80 சதவீதம் அதிகரித்து 47,452 ஆக பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 26,369 ஆக இருந்தது.