வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்-அமெரிக்காவில் சொற்களை சரியாகக் கூறும் ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தேவ் ஷா, 14, சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள நேஷனல் ஹார்பர் பகுதியில் புகழ்பெற்ற, ‘ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ – 2023’க்கான இறுதிப் போட்டி நேற்று நடந்தது.
இதில், புளோரிடாவைச் சேர்ந்த எட்டாவது கிரேட் படிக்கும் இந்திய வம்சாவளி சிறுவன் தேவ் ஷா, பல சுற்றுகளில் கேட்கப்பட்ட வார்த்தைகளை சரியாகச் சொல்லி அடுத்தடுத்து முன்னேறினார்.
இறுதிப் போட்டியின் 15வது சுற்றில், மணல் நிறைந்த பகுதிகளில் வளரும் தாவரம் அல்லது விலங்கு என பொருள்படும், ‘சாமோபைல்’ என்ற 11 எழுத்து ஆங்கில வார்த்தையை சரியாகச் சொல்லி, ஸ்பெல்லிங் பீ சாம்பியன் பட்டத்தை தேவ் ஷா வென்றார்.
இவருக்கு ஸ்கிரிப்ஸ் கோப்பை, இந்திய மதிப்பில் 41.15 லட்சம் ரூபாய் ஆகியவை பரிசுகளாக வழங்கப்பட்டன. கடந்த 2019 மற்றும் 2021ல் இந்தப் போட்டியில் பங்கேற்று தோல்வியுற்ற தேவ், தன் கடைசி வாய்ப்பான மூன்றாவது முயற்சியில் சாம்பியனாகி உள்ளார்.
வர்ஜீனியாவின் ஆர்லிங்டனைச் சேர்ந்த 14 வயது சிறுமி சார்லட் வால்ஷ், இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ போட்டியில், ஒவ்வொரு ஆண்டும் இந்திய வம்சாவளியினர் தான் சாம்பியன் பட்டத்தை வெல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement