புதுடில்லி, ரயில்வேயில் பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்வதற்காக, 2018ல், ‘ராஷ்ட்ரீய ரயில் சன்ரக் ஷா கோஷ்’ என்ற பெயரில், மத்திய அரசு ஒரு நிதியத்தை உருவாக்கியது.
இதன்படி, 2017 – 21 ஆகிய ஐந்து ஆண்டுகளுக்கு, மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும், 15,000 கோடி ரூபாயும், ரயில்வே சார்பில், 5,000 கோடி ரூபாயும் இதற்காக ஒதுக்க வேண்டும். ஆனால், இதில் அறிவித்தபடி ரயில்வே துறை, 5,000 கோடி ரூபாயை இந்த நிதியத்துக்கு ஒதுக்க தவறி விட்டதாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.
ரயில் பாதுகாப்புக்கு ஒதுக்க வேண்டிய நிதியை போதிய அளவில் ஒதுக்காததால், இந்த நிதியம் அறிவிக்கப்பட்டதன் நோக்கமே சிதைந்து விட்டதாகவும் தணிக்கை அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement