விஜய்யின் ‘லியோ’ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வருகிறது. இந்தப்படம் கோலிவுட் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என இப்போதே ரசிகர்கள் வெறித்தனமாக எதிர்பார்த்து காத்து வருகின்றனர். இந்தப்படம் குறித்து வெளியாகும் ஒவ்வொரு தகவலும் சோஷியல் மீடியாவை அதிரவிட்டு வருகிறது. இந்நிலையில் ‘லியோ’ படம் குறித்து வலைப்பேச்சு வீடியோவில் பேசப்பட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
தமிழ் சினிமாவின் தற்போதைய சென்சேஷனல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘விக்ரம்’ படம் கோலிவுட் சினிமாவே வியக்கும் வசூல் சாதனை படைத்தது. அடுத்தடுத்து இவரது இயக்கத்தில் உருவாகவுள்ள கைதி 2, விக்ரம் 2 படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளன.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இதனிடையில் தற்போது ‘லியோ’ படத்தினை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணி ‘லியோ’ படத்தில் இணைந்துள்ளனர். செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்தப்படத்தில் விஜய்யுடன் திரிஷா இணைந்து நடித்து வருகிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குனர்கள் மிஷ்கின், கெளதம் மேனன் மற்றும் மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் பாணியில் ஆக்ஷன் படமாக உருவாகி வரும் லியோவின் முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிந்தது.
ஏற்றுக்கொள்ள முடியாத அலட்சியம்.. நாட்டை உலுக்கிய ரயில் விபத்து: ‘லியோ’ பட நடிகை ஆவேசம்.!
இந்நிலையில் இந்தப்படம் குறித்து வலைப்பேச்சு வீடியோவில் அந்தணன் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ‘வாரிசு’ படப்பிடிப்பின் போது போட்டோ மற்றும் வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் லீக் ஆகி பரபரப்பை கிளப்பியது. இதெல்லாம் படத்துக்கான புரமோஷன் எனவும் விமர்சனம் செய்யப்பட்டது. இதனால் ‘லியோ’ படப்பிடிப்பில் அந்த மாதிரி எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனமாக உள்ளாராம் விஜய்.
இதற்காக ஜிம் பாய்ஸை மாற்றிவிட்டதாகவும், படப்பிடிப்பு தளத்தில் போன் உபயோகப்படுத்துவதற்கு கெடுபிடி விதித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதனால் ‘லியோ’ படப்பிடிப்பு தளத்தில் இருந்த எந்த புகைப்படங்களும் லீக் ஆகாது என கூறப்படுகிறது. இந்தப்படத்தினை தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கவுள்ள ‘தளபதி 68’ படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசயமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
1 Year Of Vikram: கோலிவுட் சினிமாவை அலற விட்ட ஆண்டவர் – லோகேஷ்: மறக்க முடியுமா..!