பாலசோர்: ஒடிசாவில் சரக்கு ரயில் மீது மோதியதால் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ஷாலிமர் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். 800-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த விபத்திற்கு தார்மீக பொறுப்பேற்றுக் கொண்டு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், கடந்த காலங்களில் இந்தியாவில் ரயில் விபத்து ஏற்பட்ட போது அதற்கு பொறுப்பேற்றுக் கொண்டு ரயில்வே அமைச்சர்கள் பதவி விலகி உள்ளதாகவும் சொல்லி வருகின்றனர். இந்த சூழலில் இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
“எங்களுக்கு வெளிப்படைத்தன்மை தான் வேண்டும். இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல. இது சீரமைப்பு பணிகள் விரைந்து செய்ய வேண்டிய நேரம்” என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திக்விஜய் சிங் ஆகியோர் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் என சொல்லியுள்ளனர்.
#WATCH | Railways Minister Ashwini Vaishnaw reacts to an incident earlier today at #BalasoreTrainAccident site where WB CM Mamata Banerjee disagreed with him on the death toll, says, “…we want full transparency, this is not time to do politics, this is time to focus on making… https://t.co/4IJ5fil79N pic.twitter.com/nrXb82DuzV