புவனேஸ்வர்: ஒடிசாவின் பாலசோர் பகுதியில் விபத்து நடந்ததை குறித்து அறிந்த உடன் காயம் அடைந்தவர்களை காப்பாற்றும் வகையில் ரத்த தானம் செய்ய ஏராளமானோர் தாமாக முன்வந்து குவிந்தனர்.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு – ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் ஷாலிமார் – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதிய விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
சம்பவம் குறித்து அறிந்த உடன், தேசிய மற்றும் மாநில பேரிடர் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்திய ராணுவ வீரர்களும் நேற்று இரவு முதல் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று கூடுதல் வீரர்கள் வந்து சேர்வார்கள் என ராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு 200 ஆம்புலன்சுகள், 45 மொபைல் மருத்துவ குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
காயமடைந்த 900ம் பேர் பல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உதவிடும் வகையில் ஆயிரகணக்கான மக்கள், தாமாக முன்வந்து, ரத்தம் கொடுக்க மருத்துவமனைகளில் குவிந்துள்ளனர். இது மனித நேயம் இன்னும் மரிக்கவில்லை என்பதை காட்டுகிறது என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement