Simbu: மரியாதை இல்லாமல் பேசுனா எப்படி… சிம்பு – கெளதம் மேனன் மோதல் பின்னணி இதுதானா?

சென்னை: சிம்பு தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் STR 48 படத்தில் கமிட்டாகியுள்ளார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சிம்பு – கெளதம் மேனன் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் அதற்கு வாய்ப்பிலை என சொல்லப்படுகிறது.

மோதலில் முடிந்த சிம்பு – கெளதம் மேனன் கூட்டணி : சிம்புவின் நடிப்பில் கடைசியாக பத்து தல திரைப்படம் வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது அவரது 48வது படத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தை கமல் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் பேனரில் தயாரிக்கவுள்ளார். இதனிடையே வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதற்கு தற்போது வாய்ப்பே இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஃபீல்ட் அவுட் ஆகியிருந்த சிம்புவுக்கு விண்ணைத்தாண்டி வருவாயா படம் தான் கம்பேக் கொடுத்தது. கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்புவுடன் த்ரிஷா நடிக்க ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இந்தப் படம் சிம்புவின் கேரியரையே மாற்றியது.

அப்போது முதல் சிம்புவும் கெளதம் மேனனும் நெருங்கிய நண்பர்களாக வலம் வந்தனர். “சுத்தமாக பணமே இல்லாமல் இருந்த நேரத்தில் சிம்பு தான் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்தார்” என கெளதம் மேனனே பல பேட்டிகளில் கூறியிருந்தார். இதனிடையே ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திலும் சிம்பு – கெளதம் – ஏஆர் ரஹ்மான் கூட்டணி மீண்டும் இணைந்தது.

அதன்பின்னர் இதே கூட்டணியில் கடந்தாண்டு வெளியான வெந்து தணிந்தது காடு படம் சூப்பர் ஹிட்டானது. இந்தப் படத்தின் க்ளைமேக்ஸில் வெந்து தணிந்தது காடு இரண்டாம் பாகத்திற்கான லீட் கொடுத்திருந்தார் கெளதம் மேனன். அதனை தயாரிப்பாளர் ஐசரி கணேஷும் உறுதி செய்திருந்தார். ஆனால், வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பில் சிம்பு – கெளதம் இடையே மோதல் ஏற்பட்டதால், 2ம் பாகம் உருவாகுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

சிம்புவும் கெளதம் மேனனும் பத்து தல படத்தில் நடித்திருந்தனர். அதிலும் கூட இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கெல்லாம் காரணம், வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பின் போது கெளதம் மேனன் சிம்புவை மரியாதை இல்லாமல் பேசினாராம். அதனால், கோபமான சிம்பு இனி கெளதம் மேனனுடன் இணைய வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

அதேபோல், பத்து தல படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் “கெளதம் மேனன் நடிகராக பிஸியாகிவிட்டதால் இனி வெந்து தணிந்தது காடு 2ம் பாகம் உருவாகுமா எனத் தெரியவில்லை” எனக் கூறியிருந்தார். ஆனால், வெந்து தணிந்தது காடு 2ம் பாகத்தில் நடித்து தருவதாக வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேஷிடம் சிம்பு வாக்கு கொடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.