லண்டன்: மாநாடு படத்தில் கம்பேக் கொடுத்த சிம்பு மீண்டும் தனது ஆட்டத்தை அதிரடியாக ஆரம்பித்துள்ளார்.
வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்களில் கேங்ஸ்டராக மிரட்டியவர், அடுத்து STR 48ல் என்ன செய்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கும் இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது.
இந்நிலையில், STR 48 படத்திற்காக லண்டன் சென்றுள்ள சிம்புவின் செம்ம மாஸ் போட்டோஸ் ட்ரெண்டாகி வருகிறது.
லண்டனில் கெத்து காட்டும் சிம்பு: சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான பத்து தல திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. ஆனாலும், அவரது ரசிகர்கள் STR 48 படத்திற்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இப்படத்தை தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
STR 48 படத்தின் அப்டேட் வெளியானது முதலே கோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. முன்னதாக பத்து தல ஷூட்டிங் முடிந்ததும் தாய்லாந்து சென்றிருந்தார் சிம்பு. STR 48 படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக்கொள்ளவே அவர் அங்கு சென்றிருப்பதாக சொல்லப்பட்டது. அதோடு உடல் எடையை நன்றாக குறைத்து செம்ம ஸ்லிம்மாக திரும்பினார் சிம்பு. அப்போது முதலே சிம்புவின் புதிய லுக் ரசிகர்களிடம் வைரலாகி வந்தது.
இன்னும் STR 48 ஷூட்டிங் தொடங்காத நிலையில், சிம்பு லண்டன் சென்றுவிட்டார். இதுவும் STR 48 படத்திற்காக தான் என சொல்லப்பட்டது. அதனால், சிம்பு லண்டனில் இருந்து திரும்பிய பின்னர் தான் STR 48 ஷூட்டிங் தொடங்கும் என தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் லண்டனில் இருக்கும் சிம்பு அங்கு கெத்தாக ஊர் சுற்றி வரும் புகைப்படங்கள் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன.
இந்த போட்டோக்களில் செம்ம ஸ்டைலிஷான காஸ்ட்யூம், மாஸ் லுக் என தாறுமாறாக இருக்கிறார் சிம்பு. இந்த கெட்டப்பில் சிம்புவை பார்க்க ஹாலிவுட் ஹீரோ மாதிரி இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர். இதுதான் STR 48 படத்தில் சிம்புவின் கெட்டப்பாக இருக்கும் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதேநேரம், STR 48 படப்பிடிப்பு எப்போது தொடங்கும் எனவும் அவர்கள் கேட்டு வருகின்றனர்.
இதனிடையே சில தினங்களுக்கு முன்னர் கமலுடன் சிம்புவும் இயக்குநர் தேசிங் பெரியசாமியும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகின. ராஜ்கமல் பிலிம்ஸின் டிவிட்டர் பக்கத்தில் இந்தப் புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. அப்போது STR 48 அப்டேட் வரலாம் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இதுவரை ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அதனால், இப்போது வெளியாகியுள்ள சிம்புவின் புகைப்படத்தை மட்டும் அவர்கள் வைரலாக்கி வருகின்றனர்.