வீரன் (தமிழ்)
`மரகத நாணயம்’ படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி, வினய், ‘நக்கலைட்ஸ்’ சசி, ஜென்சன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வீரன்’. கிராமத்து சூப்பர் ஹீரோவான குமரனும் , ஊர் எல்லை சாமியான வீரனும் கைகோர்த்து, கார்ப்ரேட் வில்லனைப் பந்தாடுவதே இதன் கதைக்களம். சூப்பர் ஹீரோ, சயின்டிஸ்ட் வில்லன் என பேன்டஸி திரைப்படமாக உருவாகியிருக்கும் இத்திரைப்படம் ஜீன் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் (தமிழ்)
கொம்பன், தேவராட்டம், விருமன் படங்களின் இயக்குநர் முத்தையாவின் அடுத்த படம் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’. ஆர்யா, சித்தி இத்னானியை, பிரபு, பாக்யராஜ், சிங்கம்புலி மற்றும் சின்னத்திரை நடிகை ஹேமா தயாள் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஜீன் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Spider-Man: Across the Spider-Verse (ஆங்கிலம்)
சூப்பர் ஹீரோவான ஸ்பைடர் மேன் கதாபாத்திரம் இந்திய ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமான கதாபாத்திரம். பல வெர்ஷனில் பல திரைப்படங்கள் இந்த ஸ்பைடர்-மேன் கதாபாத்திரத்தைத் தழுவி வந்தாலும் இதற்கெனத் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அந்த வகையில் ஜோகிம் டாஸ் சாண்டோஸ், கெம்ப் பவர்ஸ், ஜஸ்டின் கே. தாம்சன் ஆகியோர் இயக்கத்தில் ஷமேக் மூர், ஹெய்லி ஸ்டெய்ன்ஃபீல்ட், ஆஸ்கர் ஐசக் நடிப்பில் உருவாகியுள்ள ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படம் `ஸ்பைடர்-மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ்’ (Spider-Man Across The Spider-verse).
பல்வேறு பிரபஞ்சங்களின் விதவிதமான ஸ்பைடர்மேன்களை உள்ளடக்கிய கதையான இதில் இந்திய ஸ்பைடர்மேனான பவித்ர பிரபாகரின் காட்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. இத்திரைப்படம் தமிழ் உள்ளிட்ட 10 மொழிகளில் ஜூன் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Pareshan (தெலுங்கு)
ரூபாக் ரொனால்ட்சன், பண்டிட் விஜய் குமார், ஆர்யன் சாண்டி ஆகியோர் இயக்கத்தில் பவனி, முரளிதர், திருவீர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி ஜானர் தெலுங்குத் திரைப்படம் ‘Pareshan’. நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் காதலர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளையும், மகிழ்ச்சியான தருணங்களையும் கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் கடந்த ஜூன் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Zara Hatke Zara Bachke (இந்தி)
திருமணமான தம்பதிகள், அவர்கள் வீட்டிற்குத் தெரியாமல் விவாகரத்து பெற முயற்சிக்கின்றனர். ஆனால், இவர்களின் ரகசியமான இந்தத் திட்டம் ஒரு கட்டத்தில் அவர்களின் வீட்டிற்குத் தெரிந்துவிடுகிறது. அதன்பிறகு அவர்கள் விவாகரத்து பெற்றார்களா? இல்லையா? என்பதுதான் இப்படத்தின் கதை. சீரியஸான உறவுச் சிக்கல்களை என்டர்டெயினிங்காக கமெடி ஜானரில் எடுத்துள்ளார் இயக்குநர் லக்ஷ்மன் உடேகர். விக்கி கவுஷல், சாரா அலிகான், இனாமுல்ஹக் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த ஜூன் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
The Boogeyman (ஆங்கிலம்)
சாடி ஹார்பர் மற்றும் அவரின் தங்கை, சாயர் இருவரும் தங்களின் தாய் உட்பட தங்கள் குடும்பத்தில் இருப்பவர்களை அடுத்தடுத்து இழந்து வருகின்றனர். இதற்கெல்லாம் காரணம், ஒரு தீயசக்தி கொண்ட ஒரு அமானுஷ்ய மிருகம் என அறிந்து அதினிடமிருந்து எப்படி தப்பிக்கின்றார்கள் என்பதுதான் இப்படத்தின் கதைக்களமாக இருக்கிறது. ராப் சாவேஜ் இயக்கத்தில் சோஃபி தாட்சர், கிறிஸ் மெசினா, விவியன் லைரா பிளேர் உள்ளிட்டோர் நடித்துள்ள ஆங்கில மொழித் திரைப்படமான இது கடந்த ஜூன் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்:
Sulaikha Manzil (மலையாளம்) -Disney+ plus hotstar
அஷ்ரப் ஹம்சா இயக்கத்தில் நௌஷாத் அலி, லுக்மான் ஆவாரம், ஷெபினா பென்சன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Sulaikha Manzil’. திருமண நிகழ்வையொட்டி நடக்கும் காமெடி, ட்ராமா கலந்த குடும்பப் பின்னணி கொண்ட திரைப்படமாக திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் கடந்த மே 30ம் தேதி ‘Disney+ plus hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Mumbaikar (இந்தி) -Jio Cinema
சந்தோஷ் சிவன் இயக்கத்தில் விக்ராந்த் மாஸி, விஜய் சேதுபதி, தன்யா மாணிக்தலா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Mumbaikar’. ஆக்ஷன், ட்ராமா, திரில்லர் திரைப்படமான இது ‘Jio Cinema’ ஓடிடி தளத்தில் கடந்த ஜூன் 2ம் தேதி வெளியாகியுள்ளது.
Mixed by Erry (ஆங்கிலம்) – Amazon Prime Video
சிட்னி சிபிலியா இயக்கத்தில் Luigi D’Oriano, Giuseppe Arena, Emanuele Palumbo உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கிலத் திரைப்படம் ‘Mixed by Erry’. மூன்று சகோதர்களின் இசைக் கனவை மையமாகக் கொண்ட இத்திரைப்படம் ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் கடந்த மே 31ம் தேதி வெளியாகியுள்ளது.
Asur season 2 (இந்தி) – Jio Cinema
பருன் சோப்தி, அர்ஷத் வார்சி, அமே வாக் மற்றும் ரித்தி டோஹ்ரா உள்ளிட்ட பாலிவுட் நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள சீரியல் கில்லர் வெப்சீரிஸ் இந்த ‘Asur season 2’. ஏற்கெனவே இதன் முதல் சீசன் வெளியாகியுள்ள நிலையில் தற்போது இதன் இரண்டாவது சீசன் ‘Jio Cinema’ ஓடிடி தளத்தில் கடந்த ஜூன் 1ம் தேதி வெளியாகியுள்ளது.
School of Lies (இந்தி) – Disney+ plus hotstar
ஒரு தனியார் உறைவிடப் பள்ளியான RISE-ல் இருந்து காணாமல் போன 12 வயது சிறுவன். அதன் பின்னணியில் இருக்கும் மர்மம் நிறைந்த உண்மைகளைக் கண்டுபிடிப்பதுதான் இந்த இந்தி மொழி வெப்சீரிஸின் கதை. வரின் ரூபானி, வீர் பச்சிசியா, ஆர்யன் சிங் அஹ்லாவா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸ் ‘Disney+ plus hotstar’ ஓடிடி தளத்தில் கடந்த ஜூன் 2ம் தேதி வெளியாகியுள்ளது.
Scoop (இந்தி) -Netflix
‘Scam 1992’ வெப் சீரிஸை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குரான ஹன்சல் மேத்தா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தி மொழி வெப் சீரிஸ் ‘Scoop’. பத்திரிக்கையாளரின் உண்மைக் கதையைத் தழுவி எடுப்பட்ட இந்த வெப்சீரிஸ் ‘Netflix’ ஓடிடி தளத்தில் கடந்த ஜூன் 2ம் தேதி வெளியாகியுள்ளது. இதில் கரிஷ்மா தன்னா, முகமது ஜீஷன் அய்யூப், ப்ரோசென்ஜித் சட்டர்ஜி, ஹெர்மன் பவேஜா, தன்னிஷ்தா சட்டர்ஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தியேட்டர் டு ஓடிடி…
Ugram (தெலுங்கு) -Amazon Prime Video
விஜய் கனகமேடலா இயக்கத்தில் அல்லரி நரேஷ், மெரீனா, மணிகண்ட வாரணாசி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு மொழி திரைப்படம் ‘Ugram’. இத்திரைப்படம் கடந்த ஜூன் 2ம் தேதி ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Vishwak (தெலுங்கு) – Zee5
வேணு முல்கல இயக்கத்தில் அஜய் குமார் கதுர்வர், தர்பா அப்பாஜி அம்பரீஷ், லிகிதி சென்னமனேனி உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த திரைப்படம் ‘Vishwak’. தெலுங்கு மொழி ஆக்ஷன், ட்ராமா திரைப்படமான இது ‘Zee5’ ஓடிடி தளத்தில் கடந்த ஜூன் 2ம் தேதி வெளியாகியுள்ளது.
Godavari (மராத்தி) – Jio cinema
நிகில் மகாஜன் இயக்கத்தில் மோஹித் தகல்கர், நீனா குல்கர்னி, ஜிதேந்திர ஜோஷி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகியிருந்த மராத்தி திரைப்படம் ‘Godavari’. இத்திரைப்படம் தற்போது ‘Jio cinema’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Hatyapuri (பெங்காலி) – Zee5
சந்தீப் ராய் இயக்கத்தில் உருவாகியுள்ள அட்வன்சர் திரைப்படமான இது தற்போது ‘Zee5’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. பர்ன் பானர்ஜி, சந்தீப் சகர்போர்த்யா, தேபிநாத் சட்டர்ஜி உள்ளிட்ட பெங்காலி நடிகர்கள் இதில் நடித்துள்ளனர்.