ஒடிசாவில் நடந்த ரயில் விபத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். அவற்றின் விபரம்:
இத்துயர சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவோர், விரைவில் நலம் பெற்று திரும்ப வேண்டும்.
விளாடிமிர் புடின், ரஷ்ய அதிபர்
ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்து ஏற்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சீன அரசு மற்றும் மக்களின் சார்பில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விபத்தில் படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வாழ்த்துகிறேன்.
ஷீ ஜின்பிங், சீன அதிபர்
ரயில் விபத்தில் சிக்கி ஏராளமானோர் இன்னுயிரை இழந்துள்ளது மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது. ஜப்பானிய அரசு மற்றும் மக்கள் சார்பில், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
புமியோ கிஷிடோ, ஜப்பான் பிரதமர்
ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்து தொடர்பான புகைப்படங்கள் மற்றும் செய்திகள் என் மனதை நொறுக்கி உள்ளன. இவ்விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். இந்த இக்கட்டான தருணத்தில், இந்தியர்களுடன் கனடா மக்கள் துணை நிற்பர்.
ஜஸ்டின் ட்ரூடோ, கனடா பிரதமர்
ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். படுகாயம்அடைந்தவர்கள், விரைவில் நலம்பெற்று வர பிரார்த்திக்கிறேன். மீட்புப் பணியில் அயராது உழைத்து பலரது உயிரை காப்பாற்றியவர்களை பாராட்டுகிறேன்.
ரிஷி சுனக், பிரிட்டன் பிரதமர்
ரயில் விபத்தில் நுாற்றுக்கணக்கானோர் உயிரிழந்தது மிகுந்த வேதனையை அளித்துஉள்ளது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல். விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஷெபாஸ் ஷெரீப், பாக்., பிரதமர்
விபத்தில் ஏராளமானோர் இறந்தது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இக்கட்டான தருணத்தில் பிரதமர் மோடிக்கும், தங்கள் உறவுகளை இழந்து தவிப்போருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புஷ்ப கமல் பிரசண்டா, நேபாள பிரதமர்
மோசமான ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். இத்துயர சம்பவத்தில் இருந்து விரைவில் மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன்.
லோதே ஷெரிங், பூடான் பிரதமர்
ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மீட்புப் பணிகள் வாயிலாக பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
சை இங்வென், தைவான் அதிபர்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்