அரியலூர் || 13 கிலோ புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது.!!
தமிழகம் முழுவதும் போதைப்பொருட்களைத் தடுக்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள கயர்லாபாத் போலீசார் விளாங்குடி சிவன் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சாக்கு மூட்டையுடன் சந்தேகப்படும் வகையில் சென்று கொண்டிருந்தார். இதைப்பார்த்த போலீசார் அந்த வாலிபரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த சாக்கு மூட்டையில் 13 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் சிறுவளூர் வடக்கு தெருவை சேர்ந்த ராஜரத்தினம் என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இருபது வயது வாலிபர் ஒருவர் புகையிலைப் பொருட்கள் கடத்தியதால் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரபப்பை ஏற்படுத்தியுள்ளது.