சென்னை : நடிகை சாக்ஷி அகர்வால் புடவையில் இருக்கும் போட்டோவை பார்த்து ரசிகர்கள் கவிதை பாடி வருகின்றனர்.
சோஷியல் மீடியாவில் விதவிதமான ரீல்ஸ், கவர்ச்சி போட்டோக்கள் வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார் சாக்ஷி
ஏராளமான ரசிகர்களை கொண்டவர்தான் சாக்ஷி அகர்வால், எந்த எந்த புகைப்படம் போட்டாலும் லைக்ஸ் குவிந்து விடும்.
சாக்ஷி அகர்வால் : ரசிகர்களின் பேராதரவை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில், பல்வேறு இந்த நடிகைகள் கலந்து கொண்டனர். அதேபோல ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத போட்டியாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். அந்த லிஸ்டில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு பரிட்சயமானவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால்.
மாடலிங் : வட மாநிலத்தைச் சேர்ந்த சாக்ஷி அகர்வால், சிறுவயது முதலே மாடலிங் துறையில் ஆர்வமுடன் ஈடுபட்டு வந்தார். பல தொலைக்காட்சி விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து சினிமா வாய்ப்பை தேடி அலைந்த சாக்ஷிக்கு அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அடுத்த படங்களில் : அதன் காலா படத்தில் ரஜினியின் மருமகளாகவும், விஸ்வாசம் படத்தில் நயன்தாராவுக்கு தோழியாக நடித்திருந்தார். அதன் பின் டேடி, அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்த சாக்ஷி அகர்வால் அண்மையில் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான நான் கடவுள் இல்லை என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
அழகான சாக்ஷி : இந்த நிலையில் சாக்ஷி அகர்வால் கவர்ச்சியான ஆடைகளில் போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.அந்த வகையில் தங்க நிறத்தில் புடவையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அந்த இடுப்பு இடுப்பு சங்கிலியாக நான் இருந்து இருக்க கூடாதா என கேட்டு வருகின்றனர். இந்த போட்டோவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.