வாஷிங்டன்,
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய 5 நாடுகளும் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகளுக்கு இடையே அமெரிக்கா-ரஷியா பாலிஸ்டிக் ஏவுகணை அறிவிப்பு ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் உள்ளன.
இந்தநிலையில் புதியதாக பலதரப்பு ஆயுத கட்டுப்பாட்டு முயற்சிகளில் ஈடுபட அமெரிக்கா தயாராக உள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் அதிக முயற்சிகள் செய்யப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார். மேலும் வெளிப்படைத்தன்மை மற்றும் உரையாடல் ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும், நிரந்தர உறுப்பு நாடுகளிடையே ஏவுகணை ஏவுதல் அறிவிப்பை முறைப்படுத்தவும் சல்லிவன் அழைப்பு விடுத்தார்.