சென்னை ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை என அமைச்சர் மா சுப்ரமனியன் தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் இரவு சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா அருகே தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது. விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்திருப்பதோடு, பலரும் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தெற்கு ரயில்வே சார்பில் சென்னை சென்டிரல், காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றின் மூலம் ரயிலில் பயணம் செய்தவர்களின் விவரங்கள் அவர்களின் உறவினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒடிசாவில் இருந்து சிறப்பு ரயில் அதிகாலை 4.40 மணிக்குச் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் நடைமேடை 11-ஐ வந்தடைந்தது. இந்த சிறப்பு ரயிலில் […]