ஒடிசா ரெயில் விபத்து – பலி எண்ணிக்கை 294 ஆக உயர்வு.!!
ஒரிசா மாநிலம் பஹாகானா ரயில் நிலையத்தில் நேற்று மாலை 6:50 மணி அளவில் ஹௌராவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூர் ஹவுரா இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரெயில் உள்ளிட்டவை ஒன்றின் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்துக் குறித்து தகவலறிந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரைக்கும் இந்த கோர விபத்தில் சிக்கி இருநூறுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாக ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் பலர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை உயர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று கருதப்பட்டது.
இந்த நிலையில், ரெயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் பலி எண்ணிக்கை 294 ஆக உயர்ந்துள்ளது. இந்த ரெயில் விபத்து நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.