கனடா நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் பரவலாக காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.
வழக்கமாக கோடை காலத்தில் ஏற்படும் காட்டுத்தீக்களை விட இந்தாண்டு பத்து மடங்கு வேகமாக தீ ஏற்பட்டுள்ளது. இதுவரை 67 லட்சம் ஏக்கர் காடுகள் தீயில் கருகி சாம்பலாகியுள்ளன.
அந்நாட்டின் 13 மாகாணங்களிலும் 213 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாகவும், 29 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கூபெக் நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு 10 ஆயிரம் பேர் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.