தற்போதைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. அந்த வகையில் அனைவரிடமும் செல்போன் பயன்பாடு அதிக அளவில் உள்ளது.
அந்த வகையில் தற்போது பெட்டிக்கடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை அனைத்துமே ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வசதி பொதுமக்களுக்கு எளிதாக உள்ளது.
அந்த வகையில் பெட்டிக்கடை ஹோட்டல் நகை கடை உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் கூகுள் ப்ளே போன் பேடிஎம் போன்ற செயல்கள் மூலம் பொதுமக்கள் பணம் செலுத்தி பொருட்களை வாங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது இந்தியாவிலேயே முதல்முறையாக ஆன்லைன் மூலம் பேருந்தில் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் கோவையில் இயங்கி வரும் தனியார் பேருந்து ஒன்றில் டிக்கெட் எடுக்க QR கோடு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு எவ்வளவு டிக்கெட் என்பவரை நடத்தினரிடம் கேட்டு ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி டிக்கெட் வாங்கிக் கொண்டு பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.