சென்னை: சமீபத்தில் நடைபெற்ற அந்த பெரிய இடத்து வாரிசின் பட விழா எதிர்பார்த்த அளவுக்கு பேசு பொருளாகவோ படத்தின் பிசினஸுக்கான வியாபார ப்ரமோஷனாகவோ அமையவில்லை என்பதால் நடிகர் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளாராம்.
நடிகரின் கடைசி படம் என்கிற ரேஞ்சுக்கு பில்டப் செய்தும் யாரும் அந்த படத்தை சீண்டாததற்கு காரணமே அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எல்லாம் படு தோல்வியை சந்தித்தது தான் என்கின்றனர்.
ஏற்கனவே வெளியான பாஸ் நடிகரின் வெற்றிப் படத்தை காப்பியடித்தே அதே மாதிரி அந்த இயக்குநர் இன்னொரு உருட்டு உருட்டி இருக்கிறார் என்பது படத்தின் அறிவிப்பு போஸ்டர்கள் மூலமே தெரிந்து விட்டதால் தான் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிதாக ஈர்ப்போ ஆர்வமோ கிடையாது என்கின்றனர்.
காமெடி நடிகரும் காரணம்: அந்த காமெடி நடிகரை தான் முதன்மைப் படுத்தி இப்படியொரு படத்தை அந்த இயக்குநர் இயக்கி உள்ளார். ஆனால், காமெடி நடிகரின் பெயர் சமீப காலமாக பெரியளவில் டேமேஜ் ஆனது மற்றும் அவர் கம்பேக் கொடுக்கிறேன் என்கிற பெயரில் ரசிகர்களை சித்ரவதை செய்தது போல அந்த படத்தை வெளியிட்டு மொக்கை வாங்கியது என அவரது இமேஜ் டோட்டல் டேமேஜ் ஆகி உள்ள நிலையில், இந்த படத்திற்கான எந்தவொரு எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இம்மியளவு கூட இல்லை என்பது தான் நிதர்சனம் என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
நடிகருக்கு பெரிய கும்பிடு: இது என் கடைசி படம் என்றும் இதற்கு மேல் நடிக்கவே மாட்டேன் என அந்த பெரிய இடத்து வாரிசு ஓவர் சீன் போட்ட நிலையில், ஐயா, சாமி நீங்க இதுக்கு முன்ன பிடுங்கினதே தேவையில்லாத ஆணி இப்போ நீங்க எடுத்து இருக்க முடிவே சிறப்பான முடிவு என பெரிய கும்பிடு போட்டு விழா மேடையிலேயே சில பிரபலங்கள் நேரடியாகவே அவரை வழியனுப்பியது தான் செம ஹைலைட் என்கின்றனர்.
உச்ச நடிகர் காரணமா? பிரம்மாண்டமாக நிகழ்ச்சிகள் நடத்துவது முக்கியமல்ல, அதுபோன்ற நிகழ்ச்சியில் கிரவுட் புல்லரான உச்ச நட்சத்திரம் அங்கே இருக்க வேண்டும் அவர் வரமாட்டேன் என மறுத்த நிலையிலேயே அந்த நிகழ்ச்சிக்கும் அந்த படத்துக்குமான ஹைப் டோட்டலாக காலி என்கின்றனர்.
இதே கதி தான் இதற்கு முன்னதாக வெளியான அந்த பிரம்மாண்ட படத்துக்கும் நடந்தது என்றும் பாஸ் நடிகரின் வருகை எல்லாம் படத்துக்கு பெரியளவில் பிசினஸை ஏற்படுத்தியே கொடுக்காது என்பதை எப்போது தான் புரிந்துக் கொள்ளப் போகின்றனர் என்றும் கோலிவுட்டில் பல பிரபலங்களும் அந்த பெரிய நிகழ்ச்சி இப்படி பேச்சு மூச்சு இல்லாமல் முடிந்து போனதை பற்றி ஒரே பேச்சாக அடிபட்டு வருகிறது.