தினமும் 6 மணி நேரம்! ஸ்வீடனில் ‛செக்ஸ் சாம்பியன் ஷிப்’ போட்டி! ரூல்ஸை பார்த்தா அசந்துபோவீங்க!

ஸ்வீடன்: ஸ்வீடன் நாடு உடலுறவை ‛செக்ஸ்’ போட்டியாக அங்கீகரித்துள்ளது. இதற்காக வரும் 8 ம் தேதி முதல்‛செக்ஸ் சாம்பியன் ஷிப்’ போட்டி தொடங்கி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டிக்கு வித்தியாசமான ரூல்ஸ் வகுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கும், மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றும் அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகளுக்கும் இடையே ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. அங்குள்ள கலாசாரத்துக்கும் இந்திய கலாசாரத்துக்கும் இடையே அதிக வித்தியாசம் உள்ளது.

இந்நிலையில் தான் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக உள்ள ஸ்வீடன் வித்தியாசமான போட்டியை நடத்துவதாக அறிவித்துள்ளது. அதாவது உடலுறவை மையப்படுத்தி ‛செக்ஸ் சாம்பியன் ஷிப்’ போட்டியை நடத்த இருப்பதாக அந்த நாடு அறிவித்துள்ளது.

மாறுபட்ட நிலை: இந்தியாவில் இன்றும் கூட பாலியல் உறவு சார்ந்த விஷயங்களை பொதுவெளியில் பேசுவது இல்லை. தொலைக்காட்சிகளில் கூட பாலியல் உறவு சார்ந்த பிரச்சனைகளுக்கு டாக்டர்கள் அறிவுரை வழங்கும் நிகழ்ச்சிகள் நள்ளிரவில் தான் ஒளிபரப்பப்படுகிறது. ஆனால் மேற்கத்திய நாடுகளில் இப்படியான சூழல் இல்லை. அங்கு முற்றிலும் மாறுபட்ட நிலை உள்ளது.

செக்ஸ் சாம்பியன் ஷிப்: அந்த வகையில் தான் ஸ்வீடன் நாடு தற்போது ‛செக்ஸ் சாம்பியன் ஷிப்’ போட்டியை நடத்துவதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் செக்ஸை ஒரு விளையாட்டு போட்டியாக நடத்தும் முதல் நாடு என்ற பெயரை ஸ்வீடன் பெற உள்ளது. இந்த போட்டி வரும் 8 ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. என்னடா இது ‛செக்ஸ் சாம்பியன் ஷிப்’ என நீங்கள் நினைக்கும் அதே சமயத்தில் இந்த போட்டியின் விதிகள், நடத்தப்படும் விதத்தை கேட்டால் இன்னும் கூட ஆச்சரியப்படுவார்கள்.

 Sweden recognises sex as sport and European championship competition will starts June 8

பார்வையாளர்கள்: அதாவது ‛செக்ஸ் சாம்பியன் ஷிப்’ போட்டிக்கு பார்வையாளர்கள், நடுவர்கள் இருப்பார்களாம். இன்னும் சொல்லப்போனால் பார்வையாளர்கள், நடுவர்கள் இந்த போட்டியை நேரில் பார்ப்பார்கள். இதற்காக ஐந்து பர் கொண்ட நடுவர் குழு அமைக்கப்படுகிறது. மேலும் செக்ஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்போருக்கு அவர்களின் செயல்பாடுகளை பொறுத்து பார்வையாளர்கள் 70 சதவீத மதிப்பெண்ணையும், நடுவர்கள் 30 சதவீத மதிப்பெண்ணையும் வழங்குவார்கள். இதில் எந்த ஜோடி அதிக மதிப்பெண் பெறுகிறதோ அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

6 வாரம் போட்டி: இந்த போட்டி மூன்று நிலைகளாக நடக்கும். ஒவ்வொரு நிலைகளிலும் போட்டியாளர்கள் நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச புள்ளிகளை பெற வேண்டும். அப்போது தான் அடுத்தடுத்த சுற்றுகளில் பங்கேற்க முடியும். வரும் 8 ம் தேதி தொடங்கும் இந்த போட்டி 6 வாரங்கள் வரை தொடர்ந்து நடக்கும். இந்த காலத்தில் துணையை ஈர்த்தல், மசாஜ் செய்தல், ஓரல் செக்ஸ், உடலுறவு, சகிப்புத்தன்மை, போட்டோவுக்கு போஸ் கொடுத்தல் உள்பட 16 பிரிவுகளில் போட்டியானது நடத்தப்பட உள்ளது.

 Sweden recognises sex as sport and European championship competition will starts June 8

தினமும் 6 மணிநேரம்: மேலும் ஒவ்வொரு போட்டி நாளும் ஜோடிகள் 6 மணிநேரம் வரை ‛செக்ஸ் சாம்பியன்ஷிப்’ போட்டி அமர்வுகளில் பங்கேற்க வேண்டி இருக்கும். தனிப்பட்ட உறவு என்றால் 45 நிமிடங்கள் முதல் ஒருமணிநேரம் வரை பாலியல் உறவு சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டி இருக்கும்.

தவிர்க்க முடியாது: இதுபற்றி ஸ்வீஷ் பெடரேஷன் ஆப் செக்ஸ் எனும் அமைப்பின் தலைவர் டிராகன் பிராட்டிச் கூறுகையில், ‛‛செக்ஸ் உறவு என்பது ஒருவரின் உடல் மற்றும் மனஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதனால் பிற விளையாட்டுகளை போல் செக்ஸ் உறவையும் விளையாட்டாக நடத்த திட்டமிட்டுள்ளோம். இது தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. இந்த போட்டியின் வெற்றியாளர்களின் தேர்வு என்பது தங்களது ஜோடியை திருப்திப்படுத்துவது மற்றும் மகிழ்ச்சியடைய செய்வது உள்ளிட்ட அம்சங்களையே அடிப்படையாக கொண்டிருக்கும். ” என்றார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.