திமுக கூடாரத்தையே அமைச்சர் செந்தில் பாலாஜி மொத்தமாக காலி செய்து விடுவார் என்று, அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை பணிகள் குறித்து, சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் (அதிமுக ) செந்தில்நாதன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய செந்தில் நாதன், “அம்மாவுக்கு செய்த துரோகத்தால் செந்தில் பாலாஜி தற்போது அனுபவித்து {வருமான வரி சோதனையை குறிப்பிட்டு} வருகிறார்.
இன்னும் ஒரு சில ஆண்டுகளில் செந்தில் பாலாஜி திமுக கூட்டக் கூடாரத்தையே காலி செய்து விடுவார்.
அதிமுக மாவட்ட சேர்மன் பொன்மணி பாஸ்கரனின் 40 ஆண்டு கால தொழிலை ( டாஸ்மார்க் சரக்கு வாகன ஒப்பந்தத்தை எடுத்திருந்த ஒப்பந்ததாரர் ஆவார்) பாழக்கியதன் விளைவுதான், அவருடைய சாபம் தான், அவருடைய வேண்டுதல்தான் கடவுள், செந்தில் பாலாஜியை தற்போது பழி வாங்கிக் கொண்டிருக்கிது” என்ற செந்தில்நாதன் பேசினார்.