மார்த்தாண்டன்துறை பல லட்சம் ரூபாய்க்கு மேல் ஆனலைன் விளையாட்டில் பணத்தை இழந்த திரைப்பட ஒளிப்பதிவாளர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே மார்த்தாண்டன்துறையை சேர்ந்தவர் தேவதாசன். இவர் கோவை காந்திபுரம் பகுதியில் தங்கி திரைப்பட ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு ஆன்லைன் விளையாட்டில் பல லட்சம் ரூபாய் இழந்து, கடன் ஏற்பட்டதால், நிலத்தை விற்று கடனை அடைத்துள்ளார். பிறகு மனைவி ஊரான பூத்துறை கோயில் வளாகத்தில் வந்து தங்கியிருந்தார். நேற்று முன்தினம் மாலை மார்த்தாண்டன்துறைக்கு சென்றவர் பெற்றோரிடம் […]