பாரீஸ்,
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் திருவிழா பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் 4-ம் நிலை வீராங்கனையும், விம்பிள்டன் சாம்பியனுமான எலினா ரைபகினா (கஜகஸ்தான்), சாரா சோரிப்ஸ் தோர்மோவுடன் (ஸ்பெயின்) மோத இருந்தார்.
இந்த நிலையில் வைரஸ் காய்ச்சல், தலைவலியால் பாதிக்கப்பட்ட ரைபகினா நேற்று முன்தினம் இரவு சரியாக தூங்கவில்லை. உடல்நலக்குறைவால் வேறு வழியின்றி கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து ரைபகினா விலகினார். இதனால் களம் இறங்காமலேயே சோரிப்ஸ் தோர்மோ 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
Related Tags :