அண்ணனின் பைக்கை பஞ்சர் செய்து விட்டு காதலுடன் தங்கை தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் சமயபுரத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அரசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே படித்து வந்துள்ளார். அந்த இளம் பெண் பள்ளியில் படிக்கும் போது அதே ஊரை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
வேலையில் சேர்ந்து 6 மாதங்கள் ஆன நிலையில் வீட்டிற்கு சென்று வருவதாக நிர்வாகத்திடம் அனுமதி பெற்று அண்ணனுக்கு போன் செய்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு கூறியுள்ளார்.
அதே நேரத்தில் காதலனுக்கும் போன் செய்து அழைத்துள்ளார். அப்போது ஒரே சமயத்தில் அண்ணனும், காதலனும் அந்த பெண் வேலை செய்யும் இடத்திற்கு வந்தனர். நிறுவனத்திற்குள் அண்ணன் செல்ல பெண்ணின் காதலன் அவரது பைக் டயரை பஞ்சர் ஆக்கிவிட்டு அருகில் இருந்த எதுவும் தெரியாதவர்கள் போல் அருகில் உள்ள கடையில் காத்திருந்தார்.
அப்போது தங்கையுடன் வெளியில் வந்த அண்ணன் பைக் டயர் பஞ்சராகி இருப்பதை பார்த்து அருகில் உள்ள பஞ்சர் கடைக்கு வண்டியை தள்ளி கொண்டு சென்றார். இந்த நேரத்தில் இளம்பெண் தயாராக இருந்த காதலனின் பைக்கில் ஏறி எஸ்கேப் ஆகியுள்ளார்.
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்ற அண்ணன் தனது பெற்றோருக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பெற்றோர் இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் அதன் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அண்ணனை ஏமாற்றி விட்டு காதலுடன் எஸ்கேப் ஆன இளம் பெண்ணை தேடி வருகின்றனர்