வன்முறை சம்பவங்கள் ஏற்பட்ட மணிப்பூரில் கள்ளச்சந்தையில் பெட்ரோல் லிட்டருக்கு 200 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், ஏடிஎம்களில் பெரும்பாலும் பணம் இல்லாத நிலையே நீடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தை அடுத்து ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகள் குவிக்கப்பட்டன.
இந்நிலையில், அம்மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளதால் தலைநகர் இம்பாலுக்கு பொருட்கள் கொண்டுசெல்லப்படுவது தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், அரிசி, காய்கறிகள், முட்டை போன்றவற்றின் விலை உயர்ந்துள்ளதாகவும், உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் சொல்லப்படுகிறது.
இதனிடையே, இம்பால் – திமாபூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புகளை அகற்றுமாறும், அமைதியை நிலைநாட்ட மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.