தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரயில் எண் 12841 கொண்ட ஷாலிமர் – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ரயில் எண் 12864 கொண்ட யஸ்வந்த்பூர் – ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் நேற்று முன்தினம் (ஜூன் 2, 2023) மாலை 6.55 மணி முதல் 7 மணிக்குள் ஒடிசா மாநிலம் பகனகா பஸார் பகுதியில் தடம்புரண்டு விபத்தில் சிக்கியது.
பகனகா பஸார் பகுதியானது பாலசோரில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. விபத்து நடந்த பகுதி என்பது காரக்பூர் – பத்ரக் வழித்தடத்தில் இருக்கிறது. இதனால் தண்டவாளம் மற்றும் மின் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த சில நாட்களுக்கு பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்பதால் பல்வேறு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
முழுவதும் ரத்து செய்யப்பட்ட ரயில்
நேர மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ள ரயில்கள்
அடுத்து வரும் நாட்களில் மேலும் சில ரயில்களின் பயணத்தில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக விபத்து நடந்த இடத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று காலை ஆய்வு செய்தார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய பயணிகள் பலரும் பத்திரமாக அவரவர் வீடுகளுக்கு சென்றடைந்து விட்டனர். வரும் புதன்கிழமை (ஜூன் 7) காலை முதல் வழக்கமான வழித் தடங்களில் ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவித்தார்.