Army conspiracy to jail me: Imran Khan | என்னை சிறையில் அடைக்க ராணுவம் சதி: இம்ரான்கான் குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவம் தன்னை சிறை அடைக்கும் நோக்கத்துடன் தனது கட்சியை அழிக்கும் வகையில் செயல்படுகிறது என பாகிஸ்தான் மாஜி பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் விலகிய பின், அவர் மீது ஊழல், மோசடி, கொலை மிரட்டல் உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், அல்காதிர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கான் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அல்காதிர் அறக்கட்டளை வழக்கில், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் இம்ரான் கானுக்கு 2 வாரங்கள் ஜாமின் வழங்கியது. ஜாமீன் காலம் முடிவடைந்த நிலையில், மே 23ம் தேதி இம்ரான் கானுக்கு எதிரான 8 வழக்குகளிலும் வரும் ஜூன் 8 வரை ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இம்ரான் கூறியதாவது: பாகிஸ்தான் ராணுவம் தன்னை சிறை அடைக்கும் நோக்கத்துடன் தனது கட்சியை அழிக்கும் வகையில் செயல்படுகிறது. ராணுவம் மற்றும் ஐ.எஸ் அமைப்புகள் தனக்கும் தனது கட்சிகளுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. தன் மீது எண்ணற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி சிறையில் தள்ளுவதை அவர்களது நோக்கம். இத்தாண்டு நவம்பரில் நடைபெற உள்ள தேர்தலில், வெற்றி பெற்று மீண்டும் நான் பதவிக்கு வருவதை ராணுவத்தினர் விரும்பவில்லை.

நீதிமன்றங்கள் சரியான முறையில் செயல்பட்டு, நீதி வழங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ராணுவ நீதிமன்றங்கள் இதற்கு முன்னர் உரிய நடைமுறை, வெளிப்படைத்தன்மை இல்லாமை, நிர்ப்பந்திக்கப்பட்ட வாக்குமூலங்கள் ஆகியவற்றால் வழங்கப்பட்ட மரணதண்டனைகளை உள்ளிட்டவற்றை புறக்கணித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இம்ரான் கான் அண்மையில் கைது செய்யப்பட்ட போது, அவரை விடுதலை செய்யக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.