சென்னை : விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடரான பாக்கியலட்சுமி அடுத்தடுத்த சூப்பர் எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது.
அந்தத் தொடரில் இரண்டு திருமணம் செய்துள்ள கோபி, இருவருக்குமே நியாயமாக இல்லாமல், அனைவரையும் கடுப்பேற்றி வருகிறார்.
இந்நிலையில் ராதிகா -ஈஸ்வரி இடையிலான சண்டை குடும்பத்தில் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இதனால் மேலும் குழப்பம் அதிகரிக்கிறது.
ராதிகாவை வீட்டை விட்டு துரத்தும் ஈஸ்வரி :விஜய் டிவியின் முக்கியமான மற்றும் நம்பர் ஒன் தொடராக மாறியுள்ள பாக்கியலட்சுமி சீரியல், அடுத்தடுத்து பரபரப்பான எபிசோட்களை ஒளிபரப்பி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்தத் தொடர் டிஆர்பியிலும் அதிக புள்ளிகளை பெற்று முன்னணியில் உள்ள நிலையில், இந்த தொடருக்கு வீட்டில் உள்ளவர்கள் அனைவருமே ஆதரவு கொடுத்து வருகின்றனர். ஒருபுறம் இந்தத் தொடர் நிறைவடையவுள்ளதாகவும் பகீர் கிளப்பிக் கொண்டுள்ளனர். இந்த முடிவுக்கு ரசிகர்கள் ஆதரவும் ஏமாற்றமும் என ஒரே நேரத்தில் கொடுத்து வருகின்றனர்.
கோபி பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்கிறார். அந்தத் திருமணத்தில் தனக்கு எந்த வகையில் சந்தோஷம் கிடைக்கும் என்பதே அவரது எதிர்பார்ப்பாக உள்ளது. திருமணமான இரு ஆண்களுக்கு தந்தையாக இருந்துக் கொண்டு அவர் இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்தது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது. இந்நிலையில் அவர் ராதிகாவிற்கும் தன்னுடைய முழுமையான சப்போர்ட்டை கொடுக்காமல் காணப்படுகிறார்.
தன்னுடைய அம்மா, ராதிகா குறித்து பேசும் வார்த்தைகளுக்கு அவர் எதிர்ப்பு காட்டாமல் இருப்பது ராதிகாவிற்கும் கடுப்பை ஏற்படுத்துகிறது. எந்த விஷயம் நடந்தாலும் பாக்கியாவிற்கு வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சப்போர்ட் செய்வதும் அவருக்கு எரிச்சலை வரவழைக்கிறது. இந்நிலையில், அவரது மகள் மயூவும் அந்த குடும்பத்தில் புதிய இணைப்பாக இணைந்துள்ளது குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ராதிகாவையே வீட்டை விட்டு துரத்த முற்படும் ஈஸ்வரி, அந்த லிஸ்டில் மயூவையும் சேர்த்துக் கொள்கிறார்.
இந்நிலையில், அடுத்த வாரம் வெளியாகவுள்ள எபிசோட்களுக்கான புதிய ப்ரமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில் சமையல் ரூமில் காபி போட்டுக் கொண்டிருக்கும் ராதிகாவை இழுத்து வந்து கழுத்தை பிடித்து வெளியில் துரத்துகிறார் ஈஸ்வரி. இதனால் குடும்பத்தினரும் செய்வதறியாது திகைக்கின்றனர். இந்நிலையில் வீட்டு வாசலில் அனாதையாக நிற்கும் ராதிகாவை மீட்டு, கோபி வீட்டிற்குள் கொண்டு வருகிறார்.
இதையடுத்து அவர்களை தடுத்து நிறுத்தும் ஈஸ்வரி, கோபிக்கு ராதிகா வேண்டுமா அல்லது தான் வேண்டுமா என்று கேள்வி எழுப்புகிறார். இதற்கு பதில் சொல்ல முடியாமல் கோபி முழிக்க, அந்த இடத்தில் போலீசை அழைத்து வருகிறார் ராதிகாவின் அம்மா, அவர்கள் அனைவரையம் கைது செய்யும்படி கூறுகிறார். இதையடுத்து கோபியின் மனைவி ராதிகாவை வீட்டை விட்டு வெளியேற்ற யாருக்கும் உரிமை இல்லை என்று போலீசார் கூறுகின்றனர். இதையடுத்து வீட்டிற்கு மிகுந்த வன்மத்துடன் ராதிகா வருகிறார்.