சென்னை: டாக்டர் படத்தில் குழந்தையாக நடித்த அர்ச்சனாவின் மகள் கிடுகிடுவென வளர்ந்து வரும் நிலையில், அவரது லேட்டஸ்ட் போட்டோவை பிக் பாஸ் அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அர்ச்சனா அவரது கணவர் மற்றும் அவரது மகள் ஸாரா என குடும்பமாக எடுத்துக் கொண்ட படு க்யூட்டான போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.
அர்ச்சனாவை போலவே ஸாராவும் தொகுப்பாளினியாக ஆவாரா? அல்லது அவரது அழகிற்கு சினிமா ஹீரோயினாக மாறுவாரா என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
பிக் பாஸ் அர்ச்சனா: தொகுப்பாளினியாக பல முன்னணி டிவி சேனல்களில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சியில் 4வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கினார்.
அன்பு தான் ஜெயிக்கும் என கடைசி வரை அன்பு ராஜ்ஜியம் நடத்தி அனைவருக்கும் அன்னபூரணியாக வீட்டில் இருந்தாலும், அதையே ட்ரோல் மெட்டீரியலாக்கி அர்ச்சனாவை பலரும் கழுவி ஊற்றினர்.
ஒவ்வொரு போட்டியாளரும் வீட்டை விட்டு வெளியேறும் போது எல்லாம் மூலையில் உட்கார்ந்து கொண்டு கதறி அழும் அர்ச்சனாவை பார்த்து ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்தன.
அர்ச்சனாவின் அன்பு மகள்: தனது அம்மாவை சோஷியல் மீடியாவில் கடுமையாக ட்ரோல் செய்வதை பார்த்து தாங்க முடியாத அவரது அன்பு மகள் ஸாரா பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியிலேயே அதற்காகவே ஒரு ஸ்கிட் செய்து அம்மாவுடன் நடித்திருந்தார்.
அதன் பின்னர் ஸாரா பேசும் போதும், இப்படி போட்டியாளர்களை மோசமாக கிண்டல் செய்யாதீங்க என கேட்டுக் கொண்டார்.
டாக்டர் படத்தில்: சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், வினய், யோகி பாபு நடிப்பில் வெளியான டாக்டர் படத்தில் அர்ச்சனாவின் மகள் ஸாரா காணாமல் போக அதை மிலிட்ரி டாக்டரான சிவகார்த்திகேயன் எப்படி கண்டு பிடித்தார் என்கிற கதையைத்தான் டார்க் காமெடியாக எடுத்து தியேட்டருக்கு திரும்ப திரும்ப ரசிகர்களை வர வைத்து இருந்தார் இயக்குநர் நெல்சன்.
டாக்டர் படத்தில் நடித்த ஸாரா சினிமாவில் இனிமேல் தொடர்ந்து நடிப்பாரா என்கிற கேள்விகளை அடிக்கடி நெட்டிசன்கள் வைத்து வருகின்றனர். அம்மாவுடன் இணைந்து ரீல்ஸ், யூடியூப் வீடியோக்கள் வெளியிடுவது, நிகழ்ச்சிகளை அம்மாவுடன் இணைந்து தொகுத்து வழங்குவது என ஏகப்பட்ட வேலைகளை செய்து வருகிறார்.
விவாகரத்தை தடுத்த மகள்: வெளியூர் வேலை காரணமாக அர்ச்சனாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே சமீபத்தில் மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும் அவர்கள் இருவருக்கும் அவர்களது காதலை புரியவைத்து விவாகரத்து நடக்காமல் பார்த்துக் கொண்டதே தனது மகள் ஸாரா தான் என சொல்லி இருந்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
இப்படியொரு மகள் இருந்தால், வயதான காலத்தில் பெற்றோர்கள் விவாகரத்து பற்றிய எண்ணத்தையே தூக்கிப் போட்டு விடுவார்கள் என பலரும் ஸாராவையும் மனமார பாராட்டி இருந்தனர்.
சூப்பர் குடும்பம்: இந்நிலையில், தற்போது தனது கணவன் மற்றும் மகள் ஸாரா உடன் செம க்யூட்டாக அர்ச்சனா எடுத்துக் கொண்ட ஃபேமிலி புகைப்படத்தை பதிவிட்டு “What you want more than a FAMILY A complete profile” என பதிவிட்டுள்ளார்.
அதை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலர் சூப்பர் குடும்பம் என்றும் கண்ணுப் பட்டுடப் போகுது சுத்திப் போடுங்க அக்கா என்றும் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.