நடிகர்கள்: கரோலினா மிராண்டா, ரொடால்ஃபோ சலாஸ்
ஓடிடி: நெட்பிளிக்ஸ்
இயக்கம்: பாப்லோ இலானஸ்
லாஸ் ஏஞ்சல்ஸ்: நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியான Fake Profile வெப்சீரிஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
ஆரம்பத்தில் அப்படியே ஜீவா, அனுயா நடித்து ராஜேஷ். எம் இயக்கிய சிவா மனசுல சக்தி படத்தை போலத்தான் ஆரம்பிக்கிறது.
ஆனால், முதல் எபிசோடு முடிவிலேயே கதை டோட்டலாக மாறி ஹீரோயினை காதல் வலையில் சிக்க வைத்து ஏமாற்றும் நபரின் திருட்டுத்தனம் தான் கதையாக மாறுகிறது.
ஃபேக் ப்ரொபைல் கதை: நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஏகப்பட்ட அடல்ட் வெப்சீரிஸ்கள் ஒவ்வொரு மாதமும் புதிது புதிதாக உருவாகிக் கொண்டே வருகிறது. அப்படி கடந்த மாதம் வெளியான வெப்சீரிஸ் தான் இந்த ஃபேக் ப்ரொபைல்.
லாஸ் வீகாஸில் நர்ஸ் என சொல்லி டிண்டரில் தனக்கான இணையை தேடும் ஸ்ட்ரிப் டான்ஸர் தான் ஹீரோயின் கமிரா ரோமன் (நடிகை கரோலினா மிராண்டா). அவரது தேடலில் ஃபெர்ணாண்டோ (ரொடால்ஃபோ சலாஸ்) எனும் மருத்துவர் சிக்குகிறார்.
10 நாட்கள் டிண்டரில் பழகி விட்டு இருவரும் ஒரு நாள் டேட்டிங் செய்யலாம் என முடிவு செய்கின்றனர். முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் இடையே தீப் பற்றிக் கொள்ள நெட்பிளிக்ஸ் வெப்சீரிஸ் என்றால் சொல்லவே வேண்டாம் நிர்வாணக் கோலத்தில் இருவரும் படுக்கையறையில் பலான மேட்டரில் ஈடுபடுகின்றனர்.
காதலிக்க ஆரம்பித்ததும் இருவரும் மாற்றி மாற்றி உடலுறவு கொள்ளும் காட்சிகளே முதல் எபிசோடு முழுக்க போதும் போதும் என்கிற ரேஞ்சுக்கு செல்கிறது. முதல் எபிசோடு முடியும் நேரத்தில் இவர்கள் இருவரும் கலவியில் ஈடுபடுவதை ஹீரோயினின் முன்னாள் காதலர் ட்ரோன் கேமரா வைத்து படம் பிடித்து விடுகிறார்.
அதை வைத்து அவர் தான் மிரட்டப் போகிறார் என்று பார்த்தால், அவரை பொருட்டாகவே ஹீரோயின் மதிக்கவில்லை. எப்படியாவது அவன் தனனை பற்றிய உண்மையை அந்த டாக்டரிடம் சொல்லி காதலுக்கு குட்பை சொல்லி விட்டால் என்ன ஆவது என யோசிக்கும் ஹீரோயின் தான் நர்ஸ் இல்லை என்றும் ஆடைகளை கழட்டி மேடையில் கவர்ச்சி நடனம் ஆடும் ஸ்ட்ரீப் டான்ஸார் என்பதை ஓபனாக சொல்லி விடுகிறார்.
அதனால், என்ன பிரச்சனை நான் உன்னைத்தான் லவ் பண்றேன் உன் தொழிலை இல்லையே என கூலாக சொல்லிவிட மீண்டும் இருவரும் இன்பமாக என்ஜாய் பண்ணுகின்றனர்.
4 மாதங்கள் உருண்டோட ஒரு நாள் தனது தோழிகளுக்கு ஹீரோவை டின்னர் ஒன்றில் அறிமுகம் செய்து வைக்க ஹீரோயின் நினைக்கிறார். ஆனால், ஹீரோ ஆள் எஸ்கேப்.
டிண்டர்ல பார்த்தவன் தானே எவ்ளோ பேரு இப்படி ஏமாத்திட்டு எஸ்கேப் ஆகிறாங்க நீயும் ஏமாந்து விட்டாய் என தோழிகள் கலாய்க்க, காதலரை காண அவர் சொன்ன பக்கத்துக்கு நாட்டுக்கே விமானத்தில் ஏறி செல்கிறார்.
அங்கே அவர் சொன்ன மருத்துவமனையில் இருந்த ஃபெர்னாண்டோ வேறு ஒரு ஆள் என்பது தெரிய வர நாம மட்டும் ஃபேக் ப்ரொபைல் இல்லை, அந்த ஃபிராடும் ஃபேக் ப்ரொஃபைல் தான் என்பதை புரிந்துக் கொள்கிறார்.
மேலும், அவன் தங்கி இருக்கும் இடம் பற்றிச் சொல்ல, டாக்ஸி டிரைவரிடம் அந்த இடம் எங்கே இருக்கிறது என கேட்கும் ஹீரோயினிடம் அது பணக்காரர்கள் தங்கும் பகுதி என சொல்லி விட்டு அங்கே கூட்டிக் கொண்டு போகிறார்.
அங்கே சென்று பார்க்கும் ஹீரோயினுக்கு மனைவி மற்றும் வயதுக்கு வந்த மகன் மற்றும் மகளுடன் ஹீரோ சொகுசு வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருப்பதை பார்த்து ஷாக் ஆகிறார்.
அதன் பின்னர் அவனை ஹீரோயின் பழிவாங்க என்ன பண்ணார். கடைசியில் ஃபெர்னாண்டோ எனும் ஃபேக் ஐடியில் இருந்த நபர் என்ன ஆனார் என்கிற கதையை செம ஹாட்டாகவும் சுவாரஸ்யமாகவும் எடுத்து வைத்துள்ளார் இயக்குநர் பாப்லோ இலானஸ்.
பிளஸ்: முன்னணி நடிகர்களின் நடிப்பு, இளைஞர்களை கவரக் கூடிய அடல்ட் கன்டென்ட், ட்விஸ்ட்கள் மற்றும் கடைசி வரை கதை என்ன ஆகும் என்கிற பதை பதைப்பை கொடுக்கும் அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ள திரைக்கதை என அனைத்துமே பிளஸ் ஆக உள்ளது.
மைனஸ்: ஆரம்பத்திலேயே ஃபேக் ப்ரொஃபைல் டைட்டிலை பார்த்ததும் ஹீரோயினை பற்றி காட்டி விட்டார்கள், ஹீரோ தான் உண்மையான ஃபேக் ப்ரொஃபைலாக இருப்பான் என்கிற கெஸ் வந்து விடுகிறது. அதே மாதிரி தான் கதை நகர்கிறது. பல தமிழ் படங்களிலேயே இதுபோன்ற கதைகளை பார்த்து விட்ட நிலையில், கதை பெரிதாக பாதிப்பை கொடுக்காதது ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்த கதைக்கு 10 எபிசோடு என்பது ரொம்பவே ஓவர். வீக்கெண்ட் ஃப்ரீயா இருந்தால் ஒரு முறை 1.5x ஸ்பீடில் வைத்து பார்க்கலாம்!