Imran Khan is a dangerous man, warns Pakistan Army Minister | இம்ரான் கான் ஆபத்தான மனிதர் பாக்., ராணுவ அமைச்சர் எச்சரிக்கை

இஸ்லாமாபாத், ”முன்னாள் பிரதமர் இம்ரான் கான், வெளிநாடுகளில் உள்ள நம் எதிரிகளை விட மிக ஆபத்தான மனிதர்,” என, பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் க்வாஜா ஆசிப் கூறினார்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானின் ராணுவ அமைச்சர் க்வாஜா ஆசிப், பாக்., செய்தி நிறுவனத் திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

வெளிநாடுகளில் உள்ள நம் எதிரிகள் யார் என்பது நமக்கு தெரியும். ஆனால், நம் நாட்டிற்குள்ளேயே நமக்கு எதிரிகள் உள்ளனர். அவர்கள் நம்மிடையே உலவுகின்றனர். அவர்களை நம்மால் எளிதில் அடையாளம் காண முடிவது இல்லை.

பாகிஸ்தானுக்கு வெளியில் உள்ள மிகப் பெரிய எதிரி என்றால், அது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தான்.

ஆனால், அவரை விட இம்ரான் கான் ஆபத்தான மனிதர். அவர், நம் கண் முன்பே உலவுகிறார்.

இம்ரான் கான் போன்றவர்கள் நாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள்.

கடந்த மே 9ல், இம்ரான் கான் கைது செய்யப்பட்டபோது, அவரது ஆதரவாளர்கள் எப்படி வன்முறையை துாண்டி விட்டனர் என்பதை பார்த்தோம். இம்ரான் கான் ஆபத்தானவர் என்பதற்கு இந்த சம்பவம் நல்ல உதாரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.