சென்னை : சன் டிவியின் முக்கியமான தொடர்களில் கயல் முதலிடத்தில் உள்ள நிலையில் தற்போது இனியா தொடர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
விஜய் டிவியின் ராஜா ராணி தொடர் மூலம் ஏராளமான புகழையும் தன்னுடைய கணவர் சஞ்சீவையும் பெற்ற ஆல்யா மானசா, அந்த சேனலை விட்டு விலகியுள்ளார்.
ஆல்யா மானசா தற்போது சன் டிவியின் இனியா தொடரில் லீட் கேரக்டரில் இணைந்து நடித்து வருகிறார். இந்தத் தொடர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
விக்ரமுடன் ஹாப்பி ரைட் செல்லும் இனியா :சன் டிவியின் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. டிஆர்பியிலும் இந்த சேனலில் அதிகமான தொடர்கள் முதல் பத்து இடங்களில் உள்ளன. சன் டிவியின் கயல் தொடர் தொடர்ந்து முதலிடத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட ஆல்யா மானசாவின் இனியா தொடர் டிஆர்பியில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்தத் தொடர் தற்போது 150 எபிசோட்களை எட்டவுள்ளது.
இந்தத் தொடரில் விக்ரமை திருமணம் செய்யும் இனியா, அவரது அன்பை பெறுவதற்காக சிறப்பாக செயல்படுகிறார். ஆனால் விக்ரமோ, இனியாவிற்கும் அவரது செயல்பாடுகளுக்கும் மார்க் போட்டு அவரது மார்க்குகள் தொடர்ந்து அதிகமாகும்வகையில் செய்கிறார். இந்நிலையில், விக்ரமின் அப்பா நல்ல சிவம், பெண்களை அடிமைத்தனம் செய்ய வேண்டும் என்ற கருத்துள்ளவர் என்பதால், இனியாவிற்கும் அவருக்கும் தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறது.
இனியாவின் அக்காவை விக்ரமின் தம்பி இளங்கோ திருமணம் செய்துள்ள நிலையில், அவர்கள் இருவரும் சினிமாவிற்கு செல்வதால், இளங்கோவின் வேலையையும் சேர்த்து அலுவலகத்தில் இனியா முடிக்கிறார். இதனால் அவர் வீட்டிற்கு தாமதமாக வர, மழையில், கேட்டை மூடிவிட்டு அவரை வீட்டிற்குள் விடாமல் நல்லசிவம் கடுமையாக நடந்துக் கொள்கிறார். இதனால் இனியா உள்ளிட்டவர்கள் அமெரிக்காவில் இருந்து பேசுவதாகவும், இனியாவிற்கு 15 லட்சம் அலுவலகம் மூலமாக கொடுக்கவுள்ளதாகவும் கூறுகின்றனர்.
இதையடுத்து நல்லசிவம், தன்னுடைய தங்கையின் பேச்சை கேட்டுக் கொண்டு, குடும்பத்தினரிடம் மிகவும் பாசமாக நடந்துக் கொள்கிறார். உணவு பரிமாறுவது உள்ளிட்ட வேலைகளை செய்கிறார். இதையடுத்து, அவரிடம் தொடர்ந்து உண்மையை கூறடாமல் இருப்பது தவறு என்று கூறும் இனியா, உண்மையை நல்லசிவத்திடம் கூறுகிறார். ஆனால் நல்லசிவம் உடனடியாக கொதித்தெழுகிறார். குடும்பமே சேர்ந்து தன்னை நடித்து ஏமாற்றிவிட்டதாக கொதிக்கிறார்.
அவரிடம் உண்மையை எடுத்து சொல்ல இனியா, விக்ரம் உள்ளிட்டவர்கள் முயற்சி செய்கின்றனர். ஆனால் அவரது கோபம் குறையாத நிலையில், அவர் செய்தது மட்டும் சரியா எனற இனியா கேள்வி எழுப்புகிறார். இதனால் நல்லசிவத்தின் கோபம் மேலும் அதிகரிக்கிறது. இந்நிலையில், போலீஸ் அதிகாரியான விக்ரம், தன்னுடைய ஸ்டேஷனுக்கு கிளம்புகிறார். இனியாவும் அலுவலகத்திற்கு கிளம்ப, விக்ரமின் ஜீப் மக்கர் செய்கிறது. இதையடுத்து இனியாவுடன் அவரது இருசக்கர வாகனத்தில் போகிறார் விக்ரம்.
இனியா ஒழுங்காக ஓட்டுவாரா என்ற கேள்வியுடன்தான் அவரது பயணம் துவங்குகிறது. ஆனால் கரும்பு தின்ன கூலியா, தான் விக்ரமை ஸ்டேஷனில் ட்ராப் செய்வதாக இனியா கூறுகிறார். தயக்கத்துடனேயே இந்த பயணத்தில் இணையும் விக்ரம், ஒரு கட்டத்தில் இனியாவின் பின்னால் அமர்ந்து போகும் இந்தப் பயணத்தை ரொமான்டிக்காக என்ஜாய் செய்கிறார். இதனால் அவர்களுக்குள் அன்னியோன்யம் மேலும் அதிகரிக்கிறது.